போதுமான கட்டுப்பாடுகளும் பள்ளிக்கூடத்தில் வேலை பார்ப்பவர்களின் கவனக்குறைவாக இருக்கும் செயல்பாடுகளால் இந்த பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு படிப்பு மேல் ஆர்வம் குறைவாக இருக்கிறது. இப்போதுதான் என்ற பெரிய பதவியில் இருந்து இடமாற்றம் கேட்டு இங்கே பள்ளிக்கூடத்துக்கு புதிதாக வேலைக்கு வந்து சேருகிறார் ஒரு தலைமை ஆசிரியர். சிறப்பான நேர்மையான நிர்வாகத்திறமையால் மொத்த பள்ளிக்கூடத்தையும் வெற்றிகரமான நிர்வாகமாக மாற்றுகிறார். இந்த பள்ளிக்கூடத்துக்கு போட்டியாக இருக்கும் தனியார் கல்வி நிறுவனர் தொழில்முறை போட்டி என்ற காரணத்தால் இந்த தலைமை ஆசிரியருக்கு கொடுக்கும் பிரச்சனைகளையும் கடந்து எப்படி வெற்றி அடைகிறார் என்று சொல்லும் படம்தான் ராட்சசி. பொதுவாக இந்த ஜெனரில் வெளிவந்த சாட்டை படத்தை பார்த்தால் அந்த படத்தில் நல்ல சோஸியலிஸ்ட் கருத்துக்கள் இருப்பதை கவனிக்க முடியும் ஆனால் இந்த படத்தில் சிறப்பான கேபிட்டலிஸ்ட் கருத்துக்கள் இருக்கிறது. சாட்டை என்ற படத்துக்கு நேர்-ஆப்போஸிட்டாக கதை இருக்கும் படம்தான் ராட்சசி. சினிமாட்டோகிராபி நேர்த்தியாக உள்ளது. சிறப்பான கதைக்கு சரியான நடிப்புத்திறன் இருப்பதால் கதை க்ளைமேக்ஸ் வரைக்கும் வெற்றிகரமாக சென்று க்ளைமேக்ஸில் வெற்றியடைந்தும் விடுகிறது. பாடல்கள், எமோஷனல் காட்சிகள் படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே உள்ளது. இந்த படம் ஒரு தரமான படம். முறையான கல்வி எல்லோருக்குமே கிடைக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு படம் இந்த படம். கண்டிப்பாக பாருங்கள் !
No comments:
Post a Comment