Tuesday, January 16, 2024

MUSIC TALKS - POOVE UNNAI NESITHEN POOKAL KONDU POOSITHTHEN - VERA LEVEL PAATU !!

 




பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் 

கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன் 

சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே 

உள்ளத்தில் ஓசை இல்லை ஊமைக்கு பாஷை இல்லை 

கண்மணியே மெளனம் தானே தொல்லை !


நீயா என்னை நேசித்தாய் ? பூக்கள் கொண்டு பூசித்தாய் ?

உண்மை சொல்ல யோசித்தாய் ! கோழை போல யாசித்தாய் !

ஏன் கண்ணா மீசைமேலே ஆசை ?

தேன் என்றால் சாரம் வேண்டும் 

ஆண் என்றால் வீரம் வேண்டும் 

ஆண்மைதான் பெண்மை வெல்ல வேண்டும் !!


தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது 

ஓஹோ  ஆஹா  உண்மைதானா ?

ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது 

நீயா சொன்னாய் ? மெய்யே தானா ?


உன்னை அன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது 

பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது !!

பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் 

உண்மை சொல்ல யோசித்தாய் ! கோழை போல யாசித்தாய் !


காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது 

கண்ணே உந்தன் எண்ணம் என்ன ?

கண்ணடித்தால் தீராது காதல் இங்கு வாராது 

என்னை தந்தேன் இன்னும் என்ன ?


பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும் 

வீரம் உள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும் !!

பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் 

கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன் 


ஏன் கண்ணா மீசைமேலே ஆசை ?

தேன் என்றால் சாரம் வேண்டும் 

ஆண் என்றால் வீரம் வேண்டும் 

ஆண்மைதான் பெண்மை வெல்ல வேண்டும் !!


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...