தாஜ்மஹால் ஓவிய காதல் தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான் தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும் !!
இறைவன் போன் இங்கே வாழும் இருந்திடும் ஜென்மம் ஏழேழும்
பிரிவு இல்லையே உதடு எல்லாம் உனது பெயரே !
உன்னை விட ஒரு முகம் எனக்கு இல்லை அறிமுகம்
இவள் உந்தன் திருமதி ! இறைவனின் விதிப்படி !
நீ மட்டும் இல்லை என்றால் நிற்காது எந்தன் மூச்சு
நானும் தான் உன்னை போல இன்னும் என்ன பேச்சு
கல்யாண தேதி கற்கண்டு சேய்தி காதோரம் நீ சொல் தோழி
நேரம் மாலை கூடும் வேளை கண்ணா உன் கையில் பார் !
தாஜ்மஹால் ஓவிய காதல் தேவதாஸ் காவிய காதல் தான் !
தலை முதல் கால் வரை தழுவவா ஒரு முறை
பறக்குமோ தீப்பொறி பதியுமோ நகக்குறி
கீழ் மேலாய் அங்கங்கே நான் கொஞ்சம் கொஞ்சம் கிள்ள
கூச்சங்கள் தாளாமல் நான் தூண்டில் மீனாய் துள்ள
வான் மழை நீரும் வாடிடும் வேரும் ஒன்றாக கூடும் நேரம் !
தாஜ்மஹால் ஓவிய காதல் தேவதாஸ் காவிய காதல்
தனிரகம் இந்த காதல்தான் தேசம்தான் பேசும் இதையே
இந்த உறவு இறுதி வரைக்கும் !!
No comments:
Post a Comment