Friday, January 26, 2024

TAMIL TALKS EP. 32 - தனித்து கஷ்டப்படுவதும் கஷ்டம்தான் !!




முன்னேற்றத்தை தனியாகவே யாருடைய சப்போர்ட்டுமே இல்லாமல் அடைந்துவிடுவேன் என்ற விஷயத்தை மறுத்துவிடுங்கள். முன்னேற்றம் என்பது எப்போதுமே 3 பேருக்கு மேலே உதவியாக ஆதரவாக பண்ணினால்தான் கிடைக்கும். தனி மனிதனாக முன்னேற்றத்தை பற்றி யோசிக்கலாம் ஆனால் தனியாக நம்முடைய வாழ்க்கையில் வேலைகளை பார்க்க ஆரம்பித்தால் வாழ்க்கை மிகவுமே கடினமாக மாறிவிடுகிறது. நீங்கள் தனித்த பிளேயர் இல்லை , நீங்கள் எப்போதும் டீம் பிளேயர்தான் என்பதால் உங்களுக்காக ஒரு நம்பகத்தன்மை நிறைந்த மனிதர்களின் அமைப்பை உருவாக்க வேண்டும். நம்ம வாழ்க்கையில் தனித்தே வென்றுவிடுவோம் என்று நம்பிக்கையுமே கணிப்புமே நம்முடைய மனதுக்குள்ளே இருந்தாலும் நடைமுறை வாழ்க்கையில் தனி மனிதனாக வெற்றியை அடைவது சாத்தியப்படுத்த மிகவுமே கடினமான செயல். ஒரு மனிதர் ஒரு வருடத்தில் பண்ணும் வேலைகளை பத்து பேர் சேர்ந்து வேலை பார்த்தால் ஒரே மாதத்தில் முடித்துவிடலாம். கடவுள் எவ்வளவு கஷ்டப்படுகிறாரோ அதனை விடவுமே அதிகமாக கஷ்டப்பட்டால்தான் நாம் நினைத்ததை முடிக்க முடியும் என்பதால் கஷ்டப்பட தயக்கம் காட்ட வேண்டாம். கஷ்டங்களை அனுபவக்க வேண்டும். தனித்து கஷ்டப்படுவதை விட ஒரு அமைப்பாக இணைந்து கஷ்டப்பட்டு முன்னேறுவது இன்னும் கொஞ்சம் எளிமையான பிராசஸ் என்று கருதப்படுகிறது. இந்த உலகத்தில் கஷ்டங்களை அனுபவிப்பது என்பது மிகவும் கொடிய செயல். நம்முடைய வாழ்க்கையே நமக்கு வெறுத்துவிடும். மனதின் கலக்கங்கள் பெரும் பாரமாக அமைந்து வாழ்க்கையை முடித்துக்கொண்டால் மட்டும்தான் விடுதலை என்று ஒரு மட்டமான மனநிலை உருவாகிவிடும். அடுத்த நாள் கண்களை விழிக்கவே பயமாக இருக்கும். வாழ்க்கை முழுக்க வெறுப்பும் கோபமும்  வலியும் மட்டும்தான் இருப்பதால் தூக்கமே சிறந்தது என்றும் விழித்து இருக்கும் ஒரு ஒரு நாளுமே கவலைதான் என்றும்தான் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கும். அதனால்தான் தனியாக இருந்து வேலை பார்ப்பது கடினம் என்று புரிந்துகொள்ளுங்கள். இன்னொருவருடைய உதவி எப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதை விட நாமே இறங்கி பிரச்சனைகளை சரிபண்ணுவது நல்ல விஷயம்தான். ஆனால் எல்லா நேரங்களிலும் தனிப்பட்ட ஒரு மனிதனுடைய சக்தி மட்டுமே பிரச்சனைகளை வெற்றியடைய போதுமானதாக இருப்பது இல்லை. நமக்கு எப்போதுமே அதிகமான சக்தியும் அதிகாரமும் தேவைப்படுகிறது. ஒரு கணினியை வாங்க பல வருடங்களாக முயற்சிகளை பண்ணினாலும் வாங்கமுடியவே இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் வாங்கிவிட்டேன் என்றால் ஆட்டோ கேட் , ப்ரோ இ , மாயா , ட்ரீம் வீவர் , பிளென்டர் என்று நம்முடைய கிரியேடிவிட்டி வேற லெவல்லுக்கு செல்வதால் ப்ராடக்ட்டிவிட்டியும் பணத்தின் சம்பாதிப்பும் கூட வேற லெவல்க்கு சென்றுவிடும். இதுவுமே நெடு நாட்களாக நான் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் திட்டமாக மானதுக்குள்ளே இருக்கதான் செய்கிறது.

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...