Friday, January 19, 2024

TAMIL TALKS EP. - 15 - முன்னேற்றமும் பின்னடைவும் !!

 



 நிறைய நேரங்களில் நம்ம வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட கடினமான விஷயங்களை செய்ய நம்மை கட்டாயப்படுத்தும், இப்படிப்பட்ட விஷயங்களுக்கு எல்லாம் மன்னிப்பே கிடையாது என்பது போன்ற விஷயங்கள். இருந்தாலும் செய்துதான் ஆகவேண்டும். அப்படி நாம் செய்ய மறுத்தால் நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் அளவுக்கு அதிகமாக பாதிப்புகளை உருவாக்குகிறது, இந்த மாதிரி மன்னிக்க முடியாத விஷயங்களை நம்ம வாழ்க்கை எதனால் செய்யவேண்டும் என்று நம்மை கட்டாயப்படுத்துகிறது என்றால் அதுதான் அப்கிரேடு என்று சொல்லப்படுகிறது. இதனுடையை எதிர்ப்பதமாக இருக்கும் டவுன்கிரேடு என்பதையும் பார்க்கலாம், நமது கதாநாயகர் பல வருடங்களாக வேலை செய்து சம்பாதித்துக்கொண்டு இருப்பார் ஆனால் ஒரு நாளில் ஒரே ஒரு மணி நேரத்தில் அவருடைய சம்பளங்கள் கரைந்துபோக்கும், நம்ம கதாநாயகர் பூச்சியத்துக்கும் குறைவான ஒரு பரிதாபகரமான நிலைக்கு தள்ளப்படுவார். இப்படி ஒரு நிலை நடப்பது அவருடைய தலையில் எழுதப்பட்ட தலையெழுத்து என்று சமுதாயமும் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து சென்றுவிடும், யாருமே முன்வந்து நம்முடைய கதாநாயகருக்கு உதவி செய்ய மாட்டார்கள், இப்படிப்பட்ட நிலைமைதான் டவுன்கிரேடு , இந்த விஷயங்கள் நடப்பது மாயாஜாலம் என்றே சொல்லலாம், நன்றாக இருக்கும் ஒருவருக்கு பெரும்பாலும் மெடிக்கல் செலவுகளில் விதி தன்னுடைய ஆப்புகளை வைத்துவிடுகிறது. மிகவும் நுட்பமான தாக்கங்களில் பகையை வைத்துக்கூட நன்றாக வாழ்ந்துகொண்டு இருப்பவர்களின் வாழ்க்கையை நாசமாக பண்ணிவிடுகிறது. நம்ம வாழ்க்கை கொஞ்சம் வருடங்கள்தான். இன்றைக்கு இருக்கும் தரமற்ற உணவுகளையும் கண்மூடித்தனமான ட்ராஃப்பிக் வாகனங்களையும் பார்க்கும்போது நாற்பது வயதை தாண்டுவது வாழ்நாள் சாதனை என்றே கருதப்படுகிறது. மனிதர்களை மட்டுமே நம்பிவிடாதீர்கள், இன்றைக்கு உங்களிடம் சப்போர்ட் பண்ணுவது போலவே இருப்பார்கள், நாளைக்கு உங்களுடைய முதுகில் குத்தி விடுவார்கள் , வாய்ப்பு கிடைத்தால் நெஞ்சிலும் குத்திவிடுவார்கள். இந்த உலகத்தில் குப்பைகளாக யாருக்குமே பயன்படாமல் இருந்துவிடலாம் என்று முடிவு எடுத்துவிட்டால் நம்முடைய முடிவை மாற்றிக்கொள்ளாத வரைக்கும் நீங்களாக இருந்தாலும் சரி நானாக இருந்தாலும் சரி கடைசி வரைக்கும் பயன்படாத குப்பைகளாகவே வாழ்ந்துவிடலாம். இது நம்ம வாழ்க்கை நமக்கு பண்ணும் கஷ்டமான சம்பவம். நமக்குள் தாழ்வு மனப்பான்மையை வாழ்க்கை உருவாக்கினால் உயர்வு மனப்பான்மையை நம்முடைய மனதுக்குள் நாம் உருவாக்கி நம்முடைய பிரச்சனைகளை அடித்து நொறுக்க வேண்டும். இந்த வாழ்க்கை கஷ்டத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவை எடுத்துவிட்டால் குழந்தைகள் இருக்கும் குடும்பம் என்றும் பார்க்காமல் கஷ்டத்தையும் வறுமையையும் கொடுத்துவிடுகிறது. இது எவ்வளவு அபத்தமான செயல். இப்படி வாழ்க்கை நமக்கு பண்ணும் இந்த செயலால் வெட்டி வெளியே வர போதுமான பலம் இல்லாத ஒரு மாயமான வலைக்குள் நாம் மாட்டிக்கொள்கிறோம். அதனால்தான் இந்த வாழ்க்கையை எதிர்க்க வேண்டும். ஒவ்வொரு அடிக்கும் மறுபடியும் மறுபடியும் திருப்பி அடிக்க வேண்டும். நம்ம வாழ்க்கை கடினமானதுதான். வாழ்க்கை எளிமையாக மாறும் என்ற கருத்தை விட்டுவிட்டு நாமும் கடினமாக மாறவேண்டும் என்ற கருத்தைதான் எடுத்துக்கொள்ளவேண்டும். நடைமுறை பிரயோஜனம் இந்த கருத்தில்தான் உள்ளது. நிறைய நேரங்களில் நம்முடைய வாழ்க்கை நம்மை கல்லறையில் உடல்களாக பார்க்க ஆசைப்படுகிறது. வாழ்க்கை செய்யும் இந்த தவறான விஷயத்தை நாம் தவறு என்று சொல்லி வாழ்க்கையை உடைக்கும்வரைக்கும் வாழ்க்கை இதுபோன்ற கொடிய காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறது. நம்முடைய பாதுகாப்புக்காக வாழ்க்கையின் இந்த கொடிய செயல்களை தடுத்தே ஆக வேண்டும். இந்த கருத்து அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலும் நடைமுறை வாழ்க்கையிலும் சாத்தியப்படாத கருத்தாக இருக்கலாம் , இருந்தாலும் ஹாலிவுட் படங்களை போல நுணுக்கமான அறிவு என்ற சூப்பர்பவர் இருந்தால் நம்முடைய வாழ்க்கையை 2 நாட்கள் முதல் 2 வாரங்கள் வரை என்ற குறுகிய காலகட்டத்தில்லேயே உயர்த்திவிடலாம். இது உங்களுடைய கண்களுக்கு சாத்தியமற்ற விஷயமாக இருக்கலாம் ஆனால் அறிவு என்ற அடிப்படையில் மிகவும் சாத்தியமான ஒரு விஷயம். பெஸிக்காக ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள். நமக்கு பின்னால் குழியை தோண்டிக்கொண்டே இருப்பார்கள். சரியான நேரம் கிடைத்தால் நம்பவைத்து நம்மை ஒரு பெரிய குழிக்குள் தள்ளிவிட்டுவிட்டு சந்தோஷமாக நம்முடைய செல்வங்களை சேகரிப்புகளை பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள். இவர்களுடைய ஆசை , கனவு , லட்சியம் , வெறி எல்லாமே நம்முடைய பாதிப்பு என்றால் நாம் கண்டிப்பாக நேருக்கு நேராக இவர்களை எதிர்த்து சண்டைபோட வேண்டும் அல்லது மறைமுகமாக இவர்களின் சதிகளின் மின்சார வலையை தொட்டுப்பாராது நகர வேண்டும்.  நாம் நம்முடைய செயல்களை மிக மிக அதிகபட்ச வேகத்தில் செய்து முடிக்க கட்டாயப்படுத்துகிறோம். அதுவும் மிகவுமே அறிவுப்பூர்வமாக செய்து முடிக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடியோர் உலகத்தில் அறிவை பயன்படுத்துவதுதான் கடினமான விஷயம் அல்லவா ? நிறைய நேரங்களில் நம்முடைய கதாநாயகர் நம்ம வாழ்க்கையில் நல்ல அறிவியலும் சிறப்பான தொழில் நுட்பமும் இருந்தால் பிரச்சனைகளை முடித்துவிடலாம் என்று கவனமான கருத்துக்களை சொல்கிறார். ஆனால் அடிப்படையில் எல்லோருக்குமே தெரிந்த எல்லா இடத்திலும் ஃபேமஸ்ஸாக பயன்படுத்தும் பொதுவாழ்க்கை விஷயங்களால் பிரச்சனைகளை முடிப்பது என்பதுதான் பரவலாக பயன்படுத்தப்படும் நடைமுறையாக இருக்கிறது.  

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...