Friday, January 26, 2024

CINEMA TALKS - JIGARTHANDA 2014 - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


இந்த படம் வெளிவந்த பாயிண்ட் ஆஃப் வியூவில் சினிமாவுக்குள் ஒரு சினிமா என்ற கான்ஸேப்டையே மறு பதிப்பு செய்துவிட்டது என்றால் அது மிகையாகாது. சித்தார்த் ஒரு திரைப்பட இயக்குனராக கதைக்கான இன்ஸ்பிரேஷன் தேடும்போது சேது என்ற கொலைகார கேங்ஸ்ட்டரின் பேராசைக்காக கட்டாயப்படுத்தப்பட்டு சேதுவை மாஸ் ஹீரோவாக காட்டி ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் எடுக்கவேண்டும்  என்று மிரட்டப்படுகிறார். இதனால் ஆரம்பத்தில் மனம் உடைந்து போகும் கார்த்திக் தப்பித்து செல்ல எந்த ஒரு வழியுமே இல்லை என்ற ஒரு கட்டத்தில் எப்படி அவருக்கு வரும் இந்த சோதனையை வெற்றிகரமான திட்டங்களுடன் எதிர்கொள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த ஜெனெரில் படம் எடுப்பது கடினமானது. சூப்பர் ஸ்டாரின் குசேலன் போன்ற படத்தையே எடுத்துக்கொள்ளலாமே வெறும் ஸ்டாக் வசனங்களை வைத்துதான் அந்த படம் நகர்ந்துகொண்டு இருந்தது. ஆனால் இந்த படம் அப்படி அல்ல. ஒரு சிறந்த எண்டர்டெயின்மெண்ட் வேல்யூவுக்கு இந்த படத்தை நிச்சயமாக ஒரு ரெகமண்ட் பண்ணலாம். கார்த்திக் சுப்புராஜ் கதாப்பத்திரங்களினை சரியாக ஹாண்டில் பண்ணியுள்ளார். கொஞ்சம் கூட சோதப்பவில்லை. கதை சீரியஸ்ஸாக நகர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஸ்டோரி லைன் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்கும் அளவுக்கு இருந்தாலும் ஒரு ஒரு காட்சியும் அந்த காட்சிகளின் பொடன்ஷியல்லையும் கடந்து ஒரு நல்ல பிலிம் எக்ஸ்பீரியன்ஸ் கொடுப்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது. இந்த படம் ஒரு எக்ஸ்பெரிமேன்டல் சக்ஸஸ். ஸ்டோரி லைன்னுக்கான மிக சாமர்த்தியமான பிரசன்டேஷன் என்றுமே இந்த படத்தை சொல்லலாம். இந்த படத்தை கண்டிப்பாக ஒரு முறை பாருங்கள் !
 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...