Friday, January 5, 2024

TAMIL TALKS - EP.1 - நம்ம வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்தை விட்டுக்கொடுக்காமல் இருப்பது !!



 நம்ம வாழ்க்கையில் கௌரவமான வாழ்க்கை என்று வரும்போது நம்முடைய முன்னேற்றம் என்பதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க கூடாது. நம்முடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்று எல்லோரையும் நான் சொல்கிறேன். நம்ம வாழ்க்கையில் அப்படி நம்முடைய முன்னேற்றத்தை விட்டுக்கொடுத்து நமக்கு இருக்கும் மற்ற விஷயங்களை பார்த்துக்கொண்டு இருந்தோம் என்றால் பின்னாட்களில் நம்முடைய தலைமுறையில் இருப்பவர்களுக்கு நாம் முன்னேற்றம் அடையாத காரணத்தால் எந்த சப்போர்ட்டும் பண்ண முடியாத நிலைக்கு காலத்தால் கட்டாயப்படுத்தப்படுவோம்‌. மேலும் நம்முடனே பயணத்தை ஆரம்பித்து நம்மை விட மேலான நிலையில் இருப்பவர்கள் நம்மை தரையில் வைத்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் முன்னேற்றம் அடையாமல் போனால் பொதுவான பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறி என்று மாறிவிடும். இங்கே அடிப்படையில் எல்லோருமே சமம் என்ற மனநிலை உங்களுடைய உரிமைகளை கம்பரிசன் பண்ணும்போது சரியாக இருக்கலாம் ஆனால் சொத்துக்களில் கண்டிப்பாக யாருமே யாருக்குமே சமமாக இருக்க முடியாது. சொத்துக்கள் நம்ம வாழ்க்கையில் ரொம்ப முக்கியமான விஷயம். வருங்கால தலைமுறையில் இருப்பவர்களுக்கு சொத்துக்கள் மட்டும்தான் நல்ல பாதுகாப்பாக இருக்கும். நாம் உயிரோடு இருக்கிறோமோ இல்லையோ வருங்கால தலைமுறைக்கு கண்டிப்பாக நிறைய பாதுகாப்புகள் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டு்ம். பணம் காசு எதுவும் சேர்க்காமல் இருந்தால் பின்னாட்களில் நம்முடைய தலைமுறை இளமையில் வறுமை என்ற கஷ்டமான சூழ்நிலையை சந்திக்கும் அபாயம் இருக்கிறது. நம்ம வாழ்க்கையில் கெட்ட எண்ணங்கள் எல்லோருக்குமே இருக்கிறது. கெட்ட எண்ணங்கள் இல்லாத மனிதர்கள் என்று யாருமே இல்லை. இந்த மாதிரியான நேரங்களில் வருங்கால தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைப்பதும் அறிவுப்பூர்வமாக முன்னேற்றம் அடைய வைப்பதும் இன்றியமையாத ஒரு அடிப்படை பொறுப்பு ஆகும். இந்த பொறுப்பை நாம் செய்யாமல் போகிறோம் என்னும் பட்சத்தில் எதிர்காலத்தில் நம்முடைய தலைமுறையின் வாழ்க்கையை கெட்ட எண்ணம் உள்ளவர்கள் பாதித்துவிடுவார்கள். கவனமாக யோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும்.


No comments:

Post a Comment

PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !

1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...