Tuesday, January 23, 2024

TAMIL TALKS EP. 28 - பிரச்சனையை சரிசெய்ய வேண்டுமா ?


இந்த உலகத்தில் எல்லாமே தவறாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களுடைய பெர்ஸ்பெக்டிவ்வை மாற்றிக்கொள்ளுங்கள் என்று எல்லோருமே சொல்லிக்கொள்வது ஒரு குப்பை இருக்கிறது அதனை அகற்றாமல் அந்த குப்பை அங்கே இல்லை என்று கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதற்கு சமமானது , நீங்கள் தவறாக இருக்கிறது என்று சொல்லும் விஷயங்கள் கடைசி வரைக்குமே தவறாக மட்டும்தான் இருக்கும் அவைகளை உங்களால் சரிபண்ணவே முடியாது என்று ஒரு கருத்து கேள்விப்பட்டு இருக்கலாம். இந்த கருத்தை பற்றி கவனமாக யோசித்தால் ஒரு சில நேரங்களில் பெர்ஸ்பெக்டிவ்வை மாற்றிக்கொள்வதை விட தவறாக இருக்கும் விஷயங்களை நீங்கள் சரியான விஷயங்களாக மாற்றுவதுதான் இந்த மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்குமே தவிர்த்து நம்முடைய பெர்ஸ்பெக்டிவ்வை மாற்றுவது கண்டிப்பாக பிரச்சனைக்காக இருக்கும் தீர்வாக கருதப்பட முடியாது. ஒரு சில குறிப்பிட்ட கால நிலையில் மட்டும் நாம் என்ன செய்தாலும் நெகட்டிவ்வாக மட்டும்தான் முடியும் என்று ஒரு தெளிவான நம்பிக்கை இருப்பதால் இருக்கும் ஸ்டாக்ஸ்களின் எண்ணிக்கை சிறிதும் குறையாமல் இருக்க நாம் எதுவுமே பண்ணாமல் இருப்பது நமக்கு பயனுள்ள விஷயமாக இருக்கலாம். நம்மோடு போட்டி போடுபவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை செய்து அவர்களுடைய ஸ்டாக்ஸ்களை இழக்கும்போது நாம் என்ன பண்ணுகிறோம் என்றால் எந்த விஷயமும் பண்ணாமல் நம்முடைய ஸ்டாக்ஸ்களின் எண்ணிக்கையை குறையாமல் பார்த்துககொள்கிறோம். இது இலாபம் என்று கிடையாது ஆனால் வரும் நஷ்டத்தில் இருந்து நம்முடைய ஸ்டாக்ஸ்களை பாதுகாத்து வைக்கின்றோம். இதுவும் ஒருவகையான நுணுக்கம்தான். உங்களுடைய சக்திக்கு உட்பட்ட விஷயம் என்றால் பிராமிஸ் பண்ணி கொடுக்கலாம் ஆனால் உங்களுடைய சக்தியை மிஞ்சிய விஷயம் என்றாலோ உங்களுடைய வாழ்க்கையில் அதிகமான நேரத்தை கொடுக்க வேண்டிய விஷயம் என்றாலோ கண்டிப்பாக நீங்கள் பிராமிஸ் பண்ணி கொடுப்பதற்கு முன்னால் ஒரு முறைக்கு நூறு முறை யோசியுங்கள். முடிந்த வரைக்குமே யாருக்குமே பிராமிஸ் பண்ணி கொடுக்க வேண்டாம், இப்படி நான் சொல்ல முக்கியமான காரணம் என்னவென்றால் வெளி உலக சம்பவங்கள் கண்டிப்பாக நீங்கள் பண்ணிக்கொடுக்கும் பிராமிஸ்களை நிறைவேற்ற விடவே விடாது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...