Tuesday, January 30, 2024

GENERAL TALKS - கடவுள் மேலே நம்பிக்கையும் அன்பும் !




கடவுள் மேல் எப்போதுமே நிறைய நம்பிக்கையும் அன்பும் வைத்து இருக்கின்றேன். நான் மிகவுமே கடினமான சூழ்நிலைகளை வாழ்க்கையில் சந்தித்து இருக்கின்றேன். என்னுடைய அளவுக்கு யாருமே கஷ்டப்பட்டு இருக்க முடியாது. வாழ்க்கை எந்த அளவுக்கு அதிகமான பிரச்சனைகளை கொடுத்தாலும் கூட முடிந்தவரைக்கும் என்னால் யோசித்து என்ன என்ன செயல்களை செய்ய வேண்டுமோ அந்த செயல்களை செய்து பிரச்சனைகளை சரிசெய்துவிடுகிறேன் , கடவுளிடம் வேண்டிக்கொள்ளுவது எனக்கான சக்தியை மட்டும்தான். எனக்காக இந்த செயலை முடித்துவிடுங்கள் என்றும் எனக்காக இந்த பொருளை வாங்கிக்கொடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு இருப்பதை முடிந்த வரையில் குறைத்துககொள்கிறேன். இந்த உலகத்தில் எல்லோருக்குமே கடவுளாக மாறவேண்டும் என்று ஆசைகள் இருக்கும், பெரும்பாலுமே ஆசைப்பட்ட விஷயங்கள் நமக்கு கிடைக்கவில்லை என்றும் கடவுளுடைய சக்திகள் இருந்தால் எப்படியோ மாயாஜாலமாக ஆசைப்பட்ட விஷயங்கள் எல்லாமே கிடைத்துவிடும் என்றுமிதான் உங்களுடைய மனது சொல்கிறது அல்லவா ? இமாஜின் பண்ணி பாருங்களேன் நிலநடுக்கம் நடக்கும்போதும் வெள்ளத்தால் நகரங்கள் சேதமாக்கும்போதும் விபத்துக்கள் நடக்கும்போதும் நோய்களால் பாதிக்கப்படும்போதும் போர்கள் நடக்கும்போதும் என்று பெரிய பெரிய விஷயங்களில் நாம் பாதிக்கப்படும்போது நமக்கான சப்போர்ட்டாக கடவுள் மட்டும்தான் இருப்பார். கடவுள் பொறுப்பில் இருந்து காப்பாற்றுவது உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத மிகப்பெரிய விஷயம், மருத்துவத்தால் சரிபண்ண முடியாத விஷயங்களை கூட கடவுளால் குணப்படுத்த முடியும், கதைகளை கட்டிவிட்டால் நம்பி கடவுளை குறைசொல்ல கூடாது. கடவுளுடைய பொறுப்புகள் எப்போதுமே அவரை நிறைய இடங்களில் வைத்து இருப்பதால் அவரால் எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் இருக்க முடிவது இல்லை. நீங்கள் ஒரு ஆபத்தில் இருந்தால் நீங்கள்தான் உங்களுடைய ஆபத்தை எதிர்த்து சண்டை போடவேண்டும். உங்களுடைய தோல்விகளுக்கும் உங்களுடைய வலிகளுக்கும் நீங்கள் கடவுளை குறை சொல்ல வேண்டாம். நாம் பல ஆயிரம் வருடங்களாக நம்முடைய சந்தோஷத்துக்காக இன்னொருவருடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களை பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். நாம் எப்போதுமே அதிகமாக முன்னேற்றம் அடைய வேண்டும் என்றால் நமக்காக இன்னொருவர் நாம் விரும்பும் செயல்களை முடித்து இலாபம் ஈட்ட வேண்டும். விஷயங்கள் கஷ்டமாகத்தான் இருக்கிறது ஆனால் இப்படி இன்னொருவருடைய உழைப்பும் இன்னொருவருடைய கஷ்டமும் இல்லாமல் முன்னேறி செல்வது மிகவும் கஷ்டமாக இருக்கும்  ஒரு செயல். இணனைக்கு நாம் மற்றவர்களை கஷ்டப்படுத்தி சந்தோஷமாக வாழ்ந்துவிடலாம் ஆனால் ஒரு கட்டத்தில் சந்தோஷங்கள் திகட்டிப்போவதால் வாழ்க்கை மேலே வெறுப்புதான் உண்டாகும். நம்முடைய வாழ்க்கையில் கடவுளுடைய சக்திகள் இருந்தாலும் நிறைய விஷயங்களை நம்மால் மாற்றவே முடியாது. பணம் , பொருள் , செல்வம் , ஆசைகள் , சந்தோஷங்கள் , கொண்டாட்டங்கள் என்று ஒரு வாழ்க்கை உங்களிடம் இருந்தால் இன்னொரு பக்கம் , பணம் , பாதுகாப்பு , சக்தி , வெற்றிகள் , மதிப்பு , மரியாதை என்று இன்னொரு வகை வாழ்க்கையுமே உங்களுடைய சாய்ஸ்ஸில் இருக்கிறது. காலத்தில் நடக்கும் சந்தோஷமும் துக்கமும் எப்போதுமே கடவுளுடைய கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இன்னுமே கடவுளுடைய சக்திகள் மேல் அதிகமான ஆசைகள் இருக்கிறது என்றால் உங்களுக்கு ஒரு விஷயம், இந்த உலகத்துக்கு ஆக்ஸ்ஸிஜேன் கொடுக்கும் மரங்களையும் , கடல் பாசிகளையும் , தாவர உயிரினங்களையும் கொடுப்பது மட்டுமே இல்லாமல் சமநிலையில் விலங்குகள் , பறவைகள் , பூச்சிகள் மற்றும் நிறைய உயிர்களை பார்த்துக்கொள்வது மிகவுமே பெரிய பொறுப்பு ஆகும். கடவுளால் மட்டும்தான் இந்த விஷயத்தை செய்ய முடியும், நம்முடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்களை பண்ணுபவர்களை நேசிக்கின்றோம் , கெட்ட விஷயங்களை பண்ணுபவர்களை வெறுக்கின்றோம் இது போலவே கடவுளும் எப்போதுமே நல்லவர்களை நேசித்து கெட்டவர்களை வெறுத்தால் பாரபட்சம் பார்ப்பதாக அல்லவா மாறிவிடும். ஒருவருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்கள் இருக்கும் , நல்ல விஷயங்களை செய்து புண்ணியங்களை மிக மிக அதிகமாக சேர்த்துக்கொண்டு இருப்பார்கள் , இன்னொருவருக்கு மொத்த கடந்த காலமுமே பணம் இல்லாமல் பணத்துக்காக கெட்ட விஷயங்கள் எல்லாமே செய்து நிறைய பேருடைய வாழ்க்கையில் கஷ்டத்தையும் இழப்புக்களையும் கொடுத்தால்தான் வாழ முடியும் என்றே வாழ்க்கை இருக்கும் , இந்த இருவருமே கடவுளை பொறுத்த வரையில் சமம்தான். அதுதான் கடவுளுடைய கணக்கு. இந்த விஷயங்களை எல்லாம் பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டு போகலாம் ஆனால் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. எதுவுமே யோசிக்காமல் கடவுள் மேலே அன்பு செலுத்துங்கள. இதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து. 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...