இன்றைக்கு தேதிக்கு கவனிக்க வேண்டிய விஷயங்களாக நான் கருதுவது 3 விஷயங்கள். அவைகளைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம். 1. மரங்களின் பயன்பாடு !! - இந்த விஷயத்தை நன்றாக வேலைபார்த்து சரிசெய்துவிட்டால் உலகம் முழுவதுமே மழைபொழிவு அதிகமாக மாறிவிடும். இந்த உலகத்தில் நிறைய நாடுகள் தொழில் போட்டி மற்றும் முன்னேற்றத்துக்காக மரங்களை வெட்டவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றன. பாதுகாப்புக்கு பயணம் தேவை , அப்படி பணம் வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதாரம் உயர்த்தப்பட வேண்டும். தொழில் துறைகளை அதிகப்படுத்தவும் நிறுவனங்கள் மேலே வரவும் இட வசதி குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதிக்காக மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் கார்பன் டை ஆக்ஸைடு அதிகமாவதால் பசுமை இல்ல விளைவு உருவாவதால் க்ளோபல் வார்மிங் நடக்கிறது. இந்த விஷயங்களை கண்டிப்பாக கவனிக்க வேண்டும். 2. கல்வித்தரம் மேம்பாடு !! - பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு படிக்க தெரியவில்லை என்றால் இப்போது எல்லாம் அலட்சியமாக விட்டுவிடுகிறார்கள் அதுவுமே கொரோனாவுக்கு பின்னால் நிலை இன்னுமே மோசமானதாக உள்ளது. மாணவர்கள் நிறைய பொழுதுபோக்கு விஷயங்களுக்கு அடிமைகளாக மாறிவிட்டார்கள். இந்த விஷயத்தை எல்லாம் சரிசெய்து தரமான கல்வியை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் சம்பளம் குறைவான வேலை , கெட்ட பழக்க வழக்கங்கள் , தவறான செயல்கள் என்று மாணவர்களின் எதிர்காலத்தில் நெகட்டிவ்வான மாற்றங்கள் உருவாகும் அபாயம் உள்ளது. 3. கார்ப்பரேட்களுக்கு கட்டுப்பாடு : எம் என். ஸி கம்பெனிகள் உலகத்துக்கே சோறு போடும் விவசாயத்தையும் உணவு உற்பத்தியையும் கைகளுக்குள் போட்டுக்கொண்டு நிறமூட்டி , மணமூட்டி , சுவையூட்டி , கெடாமல் பார்த்துக்கொள்ளும் கெமிக்கல்கள் என்று நிறைய விஷயங்களை அள்ளி அள்ளி கொட்டிய உணவுகளை சாப்பிட வைத்து நோய்களை உருவாக்கி மருந்துகளையும் விற்று சாப்பிடுகிறார்கள். இவர்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் சராசரிக்கும் குறைவான மக்களின் வாழ்க்கை இவர்களால் மிக மிக அதிகமாக பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. கட்டுப்படுகளுக்குள் இருந்தால் மட்டுமேதான் வாழ்க்கை நன்றாக இருக்கும். இங்கே உணவு என்ற சின்ன விஷயத்தை கூட எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சில உணவுகளை அதிகமாக சாப்பிட்டால் நமக்குதான் பிரச்சனை. மானதுக்குள்ளே கட்டுப்பாடு இருந்தால்தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தை கொண்டு உணவை சரியாக சாப்பிட முயற்சி செய்வோம். ஆனால் இந்த மாதிரியான பெரிய நிறுவனங்கள் சிறந்த மூளைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து தவறான செயல்களை செய்துகொண்டு இருப்பது அடிப்படையில் கலக்கம் அளிக்கிறது. ஒரு பிஸினஸ் மாடலாக அப்லிக்கேஷன் ஃபார் லோக்கல் லாங்வேஜ் பேச்சுகள் என்று ஒரு டெக்ஸ்ட் பேஸட் இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்பதும் என்னுடைய யோசனையாக மட்டும்தான் இருந்தது. வருங்காலத்தில் என்னால் செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம்.
No comments:
Post a Comment