போதை ஒரு பாதை இல்லை . நிறைய நேரங்களில் நாம் போதையாக இருக்கும் விஷயங்களை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதை சரி என்று நினைக்கிறோம் , அது ஒரு இனிப்பாக இருக்கலாம் , இல்லையென்றால் பொருளாக இருக்கலாம் , இல்லை என்றால் வெட்டியாக காசையும் நேரத்தையும் செலவு பண்ணுவதாக கூட இருக்கலாம் , சந்தோஷம் என்பது அடிப்படையில் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் அதுவே ஒரு போதையாக மாறுகிறது. ஒரு ஒரு சக்ஸஸ் மனிதனுக்குள்ளும் ஒரு ஃபேய்லியரான மனிதன் இருப்பான் , அந்த ஃபேய்லியரான மனிதனுக்கு அல்பமான சந்தோஷங்களை கொடுத்து கவனித்து பார்த்துக்கொள்ள வேண்டாம், நம்ம வாழ்க்கையை ஃபேய்லியராக மாற்றி நடு ரோட்டில் கொண்டுபோய் நிறுத்திவிடுவான். போதையை நிறுத்துங்கள் , ஒரு மாயாஜாலமான நல்ல விஷயம் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கப்போகிறது. போதை இருந்தால் உங்களுக்கு அந்த நல்ல விஷயம் வாழ்க்கையில் நடக்காமலே போய்விடும். போதை ஒரு பாதை அல்ல. அது ஒரு நதி , உங்களுடைய படகை அந்த நதியில் நகரவிட்டு நீந்திக்கொண்டு இருந்தால் தண்ணீருக்கும் சாப்பாட்டுக்கும் அந்த நதி உங்களுக்காக வழியை பண்ணி கொடுத்துவிடும் ஆனால் எதுவுமே நிரந்தர சொத்தாக அங்கே கிடைக்காது , தண்ணீரீல் மிதக்காமல் பூமிக்கு வாருங்கள். உங்களுக்கு தேவையானது மன நிறைவு அல்ல உங்களுடய பிரச்சனையை அடித்து நொறுக்க தேவைப்படும் ஒரு நவீனமான ஆயுதம். போதை என்ற குப்பைத்தொட்டிக்குள் காசு கிடைந்தால் கூட குனிந்து எடுக்க வேண்டாம் , உங்கள் உடைகளை சார்க்கடையாக மாற்றிவிடும். உங்க வாழ்க்கையில் உங்களுக்கு சந்தோஷமான சிரிப்பு தேவைப்படுகிறது. இந்த சிரிப்பு உங்களுக்கு போதையால் கிடைக்க வேண்டுமா அல்லது வெற்றியால் கிடைக்க வேண்டுமா என்பது உங்களால்தான் முடிவு எடுக்கப்படவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கும ஒரு கேள்வி , நல்ல முடிவை எடுத்து வையுங்கள். இந்த வலைப்பூ TAMIL WEBSITE -ல் போடப்படும் தகவல்கள் உங்களுக்கு பிரயோஜனமாக இருந்தால் கண்டிப்பாக எல்லா போஸ்ட்களையும் படிக்கவும் !!
No comments:
Post a Comment