சனி, 27 ஜனவரி, 2024

MUSIC TALKS - PESA KOODATHU VERUM PECHIL SUGAM EDHUMILLAI - VERA LEVEL PAATU !




பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் 
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

ஆசைக் கூடாது !

பார்க்கும் பார்வை நீ 
என் வாழ்வும் நீ
என் கவிதை நீ 
பாடும் ராகம் நீ 
என் நாதம் நீ 
என் உயிரும் நீ


காலம் யாவும் நான் உன் சொந்தம் 
காக்கும் தெய்வம் நீ 
பாலிலாடும் மேனி எங்கும் 
கொஞ்சும் செல்வம் நீ

இடையோடு கனி ஆட 
தடை போட்டால் நியாயமா ?
உன்னாலே பசி தூக்கம் இல்லை 
எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை
இனி மேலும் ஏன் இந்த எல்லை ?

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்

சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக் கூடாது !


காலைப் பனியும் நீ 
கண்மணியும் நீ 
என் கனவும் நீ 
மாலை மயக்கம் நீ 
பொன் மலரும் நீ 
என் நினைவும் நீ

ஊஞ்சல் ஆடும் பருவம் உண்டு 
உரிமை தர வேண்டும் 
நூலில் ஆடும் இடையும் உண்டு
நாளும் வர வேண்டும்

பல காலம் உனக்காக மனம் ஏங்கி வாடுதே 
வருகின்ற தை மாதம் சொந்தம் 
அணிகின்ற மணிமாலை பந்தம்
இரவோடும் பகலோடும் இன்பம்

ஆசை கூடாது மணமாலை தந்து ஹோய்
சொந்தம் கொண்டு மஞ்சம் கண்டு லீலைகள் காண்போமே

பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் 
ஏதும் இல்லை பேதம் இல்லை லீலைகள் காண்போமே

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...