Saturday, January 27, 2024

TAMIL TALKS EP. 38 - ஒரு நிறுவனத்துக்கு வருடக்கணக்கான முயற்சிகள் !

 



எப்போதுமே தொடர்ந்து 3 வருஷத்துக்குள் நிறுவனத்தை இம்ப்ரூவ்மெண்ட் பண்ணினால் மட்டும்தான் நன்றாக இருக்கும். மூன்று வருடங்களுக்கு மேலே நஷ்டம் என்றால் மனதால் தாங்க முடியாது. மனது எப்படியாவது'சாதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு டிஸப்பாயிண்ட்மெண்ட்டாக மாறிவிடும். இதனால்தான் ஒரு நிறுவனத்துடைய டைம்லைன் என்பது முதல் 3 வருடங்களில் பெரிய சாதனையை செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும், ஒரு நிறுவனம் அதனுடைய லேகஸியை முதல் 3 வருடங்களுக்குள்ளே அமைக்காமல் போனால் வாழ்க்கை மிகவும் கஷ்டமாக அமைந்துவிடும். ஒரு நிறுவனத்தை பொறுத்த வரை சப்மேரேன் போல தன்னுடைய வேலைகளில் மட்டுமே கவனம் வைத்து பண்ணக்கூடிய நிறுவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கையாக நாம் செய்யும் விஷயங்கள் ஜெயிக்கத்தான் போகிறது என்ற மனநிலையில் வேலை செய்ய வேண்டும். ஒரு சில கட்டங்களில் நிறுவனத்தை விட்டுவிட்டு சம்பள வேலைகளுக்கு சென்றுவிடலாமா என்று கூட தோன்ற ஆரம்பித்துவிடும் ஆனால் வாழ்க்கை என்பது அப்படி வேலை பார்க்காது. வாழ்க்கையில் நிறுவனத்தை ஆரம்பிக்க முயற்சி பண்ணினால் உங்களுடைய வாழ்க்கையில் சந்தோஷங்களை விடவேண்டியது இருக்கும் நல்ல வாய்ப்புகளை விட்டுவிட வேண்டியது இருக்கும். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் எல்லோருமே ஒரே ஒரு குடும்பம் போல சேர்ந்துதான் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு ஒரு நாளுமே அந்த நிறுவனத்துக்கு இலாபகரமான ஒரு நல்ல நாளாக மட்டும்தான் அமையவேண்டியது இருக்கும். நிறுவனத்துக்கு எப்போதுமே அதிகமாக பணம் தேவைப்படுகிறது. பணம் நிறுவனத்தின் பலமாக கருதப்படுகிறது. மோதல்கள் மற்றும் போட்டிகள் இல்லாமல் நிறுவனங்கள் இல்லை. ஒரு சில நேரங்களில் நடக்கக்கூடிய விஷயங்களில் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பதுதான் எப்போதுமே நிறுவனத்தை காப்பாற்ற நல்ல ஆப்ஷனாக இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே 10 வருடம் அனுபவத்தை வளர்த்துக்கொண்டு முன்னேற்றத்தை தொடங்குவது மிகவுமே நல்ல விஷயம். போதுமான அனுபவம் இல்லாமல் வேலைகளை செய்வது கொஞ்சம் ஆபத்தானது. ஒரு தொழில் துறையை தொடங்குவதுமே இப்படிப்பட்ட விஷயங்களில் ஒரு விஷயம்தான். புது புது விஷயங்களை சோதனை அடிப்படையில் செய்யாமல் மறுபடியும் மறுபடியும் திரும்ப திரும்ப நடக்கும் ஒரு அளவுக்கு பிரயோஜனம் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களை மட்டும் செய்யும் உயிராக வாழவேண்டும் என்றால் மரமாகத்தான் வாழ முடியும், உண்மையில் எதார்த்த வாழ்க்கையை புரிந்துகொள்ளுங்கள் நீங்கள் தாஜ் மஹால் கட்டவேண்டும் என்றாலும் செங்கல்லில் இருந்துதான் உங்கள் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். வாழ்க்கை இப்படித்தான். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...