வெள்ளி, 12 ஜனவரி, 2024

MUSIC TALKS - NENJAM UNDU NERMAI UNDU - VERA LEVEL PAATU

 


நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 

அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு ?

தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

 

கொடுமையை கண்டு கண்டு பயமேதற்கு ?

நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு ?

 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அண்ணாந்து பார்க்கிற மாளிகைகட்டி

அதனருகினில் ஓலையில் குடிசைகட்டி

 

பொன்னான உலகென்று பெயரும் இட்டால்

இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

 

உண்டு உண்டு  என்று நம்பி காலை எடு

இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு

 

இரண்டில் ஒன்றை பார்பததுக்கு தோளை நிமிர்த்து

அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து

 

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...