Saturday, January 27, 2024

GENERAL TALKS - சராசரியான வாழக்கை போதாது போதாது !

 



இன்னைக்கு நாம் ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கோம் , நாளைக்குமே இதேப்போல ஒரு சராசரியான வாழ்க்கையை வாழ்ந்துவிடுவோம் , நாளை மறுநாளும் நாம் சராசரியான வாழ்க்கையை வாழ்வோம் என்று ஒரு மட்டமான முடிவை நீங்கள் எடுக்க கூடாது. இன்னைக்கு நீங்கள் வாழ்க்கையை அதிகமாக வாழ்ந்து உங்களுக்கான பொருட்களை சேர்த்துவைக்கவில்லை என்றால் வருங்காலம் அதிகமான செலவுகளை கொடுக்கும்போது உங்களால் அல்லது உங்களை சார்ந்தவர்களால் அத்தகைய பண வகையிலான செலவுகளை சமாளிக்க முடியாது. இந்த வலைப்பூவை பெர்ஸனல் வலைப்பூவாக பல வருடங்களாக பயன்படுத்திக்கொண்டு வருகிறேன், இந்த வலைப்பூ பதிவுகளை தொடர்ந்து ஃபாலோ பண்ணிக்கொண்டு இருப்பவர்களுக்கு நான் என்னுடைய சொந்த டெக்னாலஜி நிறுவனத்தை உருவாக்க எவ்வளவு கஷ்டப்பட்டு தோற்றுப்போனேன் என்று நன்றாகவே படித்து தெரிந்து இருக்கலாம். இதுதான் வாழ்க்கை, டெக்னாலஜி ரேயின்ஃப்பால் என்ற இந்த நிறுவனத்தில் இருந்து வருங்காலத்தில் கம்ப்யூட்டர்கள் , ஃபோன்கள் , லேப்டாப்கள் என்று எல்லாமே நம்முடைய பிராண்ட் என்றே இருக்க வேண்டும். இது ஒரு கனவுதான், இதனை சாத்தியப்படுத்த நிறைய போராடிய காலங்கள் என்னுடைய வாழ்க்கையில் உண்டு, நான் இந்த உலகத்தின் தூய்மைக்காக சுகாதாரத்துக்காக என்னால் எவ்வளவு போராட முடியுமோ அவ்வளவு போராடிவிட்டேன். என்னுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமா ? நான் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் கிடைத்தால் மட்டும்தான் என்னால் இந்த உலகத்துக்கான நன்மையை செய்ய முடியும், பெரிய பெரிய நிறுவனங்கள் குப்பைகளை குறைக்க பிளாஸ்டிக் பயன்பாட்டை நீக்குகிறேன் என்று போனுக்கு கொடுக்கும் சார்ஜர்களை கட் பண்ணுகிறார்கள். எவ்வளவு பெரிய முட்டாள்தனம் இது தெரியுமா ? நிறைய பிளாஸ்டிக் குப்பைகள் குறித்த ஆவனப்படங்களை ரெஃபரென்ஸ் எடுத்து குப்பைகளை நீக்க என்னால் முடிந்த முயற்சிகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறேன், இருந்தாலுமே வாழ்க்கையுடைய கட்டாயத்தால் உருவாகும் தோல்விகள்தான் எல்லா பிரச்சனைகளுக்குமே காரணமாக உள்ளது. கட்டாயத்தால் உருவாகும் தோல்வி என்றால் நம்மால் ஜெயிக்க முடியும் ஆனால் வேண்டுமென்றே தோல்வி அடைய வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகிறது. சாம்சங் , சோனி , ஆப்பிள் என்று டெக்னாலஜி கம்பெனிக்கள் நமக்கு போட்டியாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களை ஜெயிக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய விஷயம் ஆனால் போதுமான ஆதரவு இல்லாமல் எல்லோராலும் ரெஜெக்ட் பண்ணப்படுகிறேன். இப்போது எழுதும் , வரையும் ஸ்டேஷன்னரி பொருட்கள் என்று பார்த்தால் கேம்லின் , ஃபேபர் காஸ்டேல் , கிளாஸ் மேட் , டாம்ஸ் என்று நிறைய பிராண்ட்கள் இருக்கிறது. எதனால் கம்மேர்ஷியல் கம்பெனிகள் இல்லை ? காரணம் என்னவென்றால் படித்த ஆடியன்ஸ் எப்போதுமே பிராண்ட்களை மட்டும்தான் விரும்புகிறார்கள். தரமான கம்பெனி ஐட்டம் என்றால்தான் ஒரு குவாலிட்டிக்கான உத்திரவாதத்தை நம்மால் கொடுக்க முடியும் என்றும் குடிசை தொழில் என்றால் குவாலிட்டி இல்லை பொருட்கள் என்றால் கண்டிப்பாக வேலைக்கு ஆகாது என்றும் எந்த உத்திரவாதத்தையும் கொடுக்க முடியாது என்றும்தான் தொழில் துறை இப்போது வேலை பார்க்கிறது. நான் பிராண்ட்டட் கம்பெனி  கிரியேட் பண்ண நினைக்கின்றேன். இந்த லட்சியத்துக்காக எல்லை வரைக்கும் சென்று போராடிக்கொண்டு இருக்கிறேன். பொருட்களை அபகரிப்பது சுலபமானது ஆனால் சம்பாதிப்பது கடினமானது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...