Sunday, January 21, 2024

TAMIL TALKS EP. 18 - பிராக்டிகல் உலகம் இப்படித்தான் !!

 





நம்ம வாழ்க்கையுடைய போட்டி ரொம்ப கடினமானது. எந்த அளவுக்கு என்றால் நம்மால் ஒரு கட்டத்தில் முடியாத ஒரு நிலை உருவாகும். நாம் காலையில் கண்களை திறப்போம் ஆனால் அந்த நாட்களுக்கான செயல்களை செய்யவோ அல்லது அந்த நாளை சந்திக்கவோ துணிவு இல்லாமல் அந்த நாளை நாம் வாழவே பயப்படுவோம், நிறைய நேரங்களில் இந்த விஷயம் சோம்பேறித்தனமாக கருதப்படுகிறது. அதுதான் இல்லை. இந்த விஷயம் ஒரு விதமான பயம்தான். நமக்கு நடக்கும் நல்ல விஷயங்களை எல்லாம் வாழ்க்கை எப்படியாவது கேன்ஸல் பண்ணிவிடுகிறது. நாம் என்னதான் போராடினாலும் வாழ்க்கையால் கேன்ஸ்ல் பண்ணப்பட்ட விஷயத்தை நம்மால் மறுபடியும் அடையவே முடிவது இல்லை. உதாரணத்துக்கு பணத்தை எடுத்துக்கொள்ளுங்களேன் , பணம் நமக்கு ரொம்பவுமே அவசியமான விஷயம். பணம் இருந்தால் எல்லோருக்குமே நம்மை பிடிக்கும். ஒரு அன்கண்டிஷன்னலான அன்பு கிடைக்க வேண்டுமென்றால் நமக்கு யாராவது அட்டன்ஷன் கொடுக்க வேண்டும், யாருடைய கண்களுக்குமே தெரியாமல் தெருவோரத்தின் கூழாங்கல் போல இருந்தால் எப்படி யாராவது கவனித்து , நம்மை புரிந்துகொண்டு நமக்கான அன்பை கொடுப்பார்கள் ? உங்களுக்கு தேவையானது அன்பு என்றால் முதலில் அன்பு என்பதே தற்காலிகமானது என்பதை புரிந்துகொள்ளுங்கள். நிரந்தரமாக யாருமே அன்பை கொடுக்க மாட்டார்கள். அன்புக்கு அடைக்கும் தாள் இல்லை ஆனால் விற்கப்படும் விலை இருக்கிறது. மனிதர்கள் உங்களை அன்போடு நடத்தவேண்டும் என்று ஆசைப்பட்டால் கண்டிப்பாக ஒரு விலையை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தே ஆகவேண்டும். இலவசமான வகையில் கிடைக்கும் அன்பு போதுமான தரத்தை இழந்து இருக்கிறது. அல்லது வாராக்கடனாக முடிகிறது. இங்கே இன்னொரு விஷயம் என்னவென்றால் பிறந்ததில் இருந்தே பணக்காரர்களாக இருப்பவர்களுக்கு வாழ்க்கை என்னும் போரை வாழவேண்டிய அவசியமே இல்லை என்றுதான் இருக்கிறது. அதுவே நம்முடைய வாழ்க்கையில் பணம் இல்லை என்றால் கற்றோருக்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு என்பது போல கல்லாதவருக்கு சென்ற இடம் எல்லாம் கண்டுகொள்ளாமை என்ற நிலை உருவாகிறது. உங்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து செய்ய வேண்டியவைகளை ஒரு பெரிய பட்டியலாக போடுங்கள். உங்களுடைய உடல் சோர்வுக்கும் மன வேதனைக்கும் நீங்கள் இடம் கொடுக்காமல் உங்களால் செயல்களை நெருப்பு போல செய்துகொண்டே இருக்க முடிந்தால் கண்டிப்பாக உங்களுடைய பட்டியலின் பெரும்பாலான வேலைகளை உங்களால் முடிக்க முடிவதை நீங்கள் உணரலாம். இந்த வேலைகளை நீங்கள் செய்யும் முன்னதாக நீங்கள்தான் உங்களுடைய வேலை செய்யும் திறன் இவ்வளவுதான் என்று உங்களுக்கு உள்ளே ஒரு எல்லைக்கோடு கட்டிக்கொண்டு உங்களை நீங்களே ஒரு அறைக்குள் பூட்டிக்கொள்வது போல நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றீர்கள். நேரடியாக வெளியே வாருங்கள். உங்களுடைய பிரச்சனைகளை உடைத்து நொறுக்குங்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் விஷயங்களை இன்னும் அதிகமாக இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...