Saturday, January 27, 2024

MUSIC TALKS - JANAUARY NILAVE NALAMTHANA JANAGANIN MAGALE SUGAMTHANA ? - VERA LEVEL PAATU !






ஜனவரி நிலவே நலம் தானா ? ஜனகனின் மகளே சுகம் தானா ?
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் 
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே !!!

உன்னை விட ரதியும் அழகில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை விட நதியும் அழகில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை விட மலரும் அழகில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை விட மயிலும் அழகில்லை ! பொய் சொல்லாதே !

ரதியும் அழகில்லை, நதியும் அழகில்லை
மலரும் அழகில்லை , மயிலும் அழகில்லை
பொய் சொல்லாதே !
விண்ணும் அழகில்லை , மண்ணும் அழகில்லை
மானும் அழகில்லை , நானும் அழகில்லை
பொய் சொல்லாதே !

ஜென்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும்
கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும்
மூச்சு நின்று போன பின்பும் எனக்கும்
நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும்

பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே

நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை ! பொய் சொல்லாதே !
இன்று முதல் இதயம் துடிக்கவில்லை ! பொய் சொல்லாதே !
உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை! பொய் சொல்லாதே !
கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை! பொய் சொல்லாதே !

நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை
பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை
பொய் சொல்லாதே !

இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும்போதும்
வஞ்சி நீ இன்றி வாழ்கை எனக்கில்லை
பொய் சொல்லாதே !

உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும்
நீ சூடி கொண்ட காகிதப்பூ மணக்கும்
உன் புன்னகையில் என் மனது திறக்கும்
உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே !!!

ஜனவரி நிலவே நலம் தானா ? ஜனகனின் மகளே சுகம் தானா ?
உன்னிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் 
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்
பொய் சொல்லாதே பொய் சொல்லாதே.. பொய் சொல்லாதே !!!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...