Friday, January 26, 2024

TAMIL TALKS EP. 33 - நம்மை சிறப்பானவர்களாக மாற்ற வேண்டும் !!

  



இந்த விஷயத்தை பண்ணுங்கள் பாஸ் ! உங்களுக்கு வெற்றி நிச்சயமாக கிடைத்துவிடும் என்று விளம்பரங்களை கொடுத்து வாழ்க்கையில் மிகவும் சோதனைக்கு உள்ளாக்குவார்கள் , நம்ம வாழ்க்கையில் வெற்றியுடைய அவசியத்தை உணர்ந்து உங்களுக்கு வெற்றி கிடைத்துவிடும் என்று நம்பிக்கை கொடுத்து நம்மால் ஆகவேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிடுவார்கள். வாழ்க்கையில் என்னதான் வெற்றிக்காக அலைந்துகொண்டு இருந்தாலும் இதுபோல சுயநலம் மிக்கவர்கள் மூளையை சலவை பண்ண அனுமதிக்க கூடாது. இந்த உலகத்தில் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டு நம்முடைய புத்தியை மிகவும் சிறப்பாக மாற்றிவிட்டோம் என்றால் நாம் செல்லும் இடம் எல்லாம் வெற்றி தன்னால் நம்மை தேடிக்கொண்டு நெருங்கிவிடும், நம்மை விட இன்னொருவர் சிறப்பானவர் மற்றும் திறமையானவர் என்று நினைக்கும் வரைக்கும் மனதுக்குள்ளே இருக்கும் ஒரு தரமட்ட மனப்பான்மை ஒரு பாரமாக நம்முடைய வாழ்க்கையை எப்போதுமே மேலே பறக்கவிடாமல் தடுத்துவிடும். உங்களுடைய நிலை என்ன ? என்பதையும்  உங்களுடைய சக்திகள் என்ன ? என்பதை புரிந்துகொள்ளுங்கள் , அவைகளை மேம்படுத்துங்கள் , யாருக்குமே கடன்பட்ட மனிதர்களாக இருக்க வேண்டாம். உங்களுடைய கடன்களை அடைக்க உங்களுடைய வாழ்க்கையில் உங்களுடைய முன்னேற்றத்தை தியாகம் பண்ண வேண்டாம். உங்களுடைய பிரச்சனைகளை தீர்க்க மிகவுமே சரியான விஷயம் உங்களுடைய அறிவுத்திறன்தான். உங்களுடைய வாழ்க்கையில் ஸ்மார்ட்னஸ் இருந்தால் வாழ்க்கையில் சக்ஸஸ் எப்போதுமே இருக்கும் என்பதை கவனத்தில் வையுங்கள். ஒரு காலத்தில் பள்ளிக்கூடங்களில் டிக்டேஷன் என்று ஒரு முறை இருந்தது, அதாவது இங்கிலீஷ் சப்ஜெக்ட்டில் இருக்கும் கடினமான வார்த்தைகளின் ஸ்பெல்லிங்கை நினைவில் நிறுத்தி ஆசிரியர் சொல்ல சொல்ல அந்த வார்த்தைகளை நாம் காலியான நோட்டு புத்தகத்தில் எழுதுவதுதான் டிக்டேஷன் , இப்படி மறுபடியும் மறுபடிவயும் எழுதுவதால் இங்கிலீஷ் போன்ற ஒரு வெளிநாட்டு லேன்க்வேஜ்ஜிலும் எழுதும்போது நம்மால் மிஸ்டேக்ஸ் இல்லாமல்  எழுத முடிகிறது. பின்னாட்களில் நமக்கு ஸ்பெல்லிங் மறந்து போனாலும் நம்முடைய வாழ்க்கையில் ஒரு டிக்டேஷன் தேவைப்படத்தான் செய்கிறது. ஒரு சயின்ஸ் நிறைந்த படைப்பாக இந்த முறையை நான் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுகிறேன். நாம் செய்யக்கூடிய செயல்களில் சயின்ஸ் மற்றும் சோசியல் லெவல் அக்யூரேஸி இருந்தால் நாம் எப்போதுமே யாராலுமே தடுக்க முடியாத சக்திகளாக மாறிவிடுகிறோம். காலம் நம்முடைய வெற்றியை எப்போது வேண்டுமென்றாலும் பூச்சியம் என்று மாற்றலாம். காலத்தை உடைத்து வெற்றியை எடுத்துக்கொள்ள நாம் எப்போதுமே போராட வேண்டும். இணையத்தில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் டெக்ஸ்ட் டேட்டாவாக பதிவு பண்ணி விற்பனை பண்ணும் ஒரு ப்ராஜக்ட் மானதுக்குள்ளே இருக்கிறது. இது எப்படி சாத்தியமாக மாறுகிறது என்பதுக்கு காலம்தான் எனக்கு பதில் சொல்ல வேண்டும். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...