நம்ம வாழ்க்கையினை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கவே முடியாது, இந்த உலகமே காணாத அளவுக்கு குளோபல் பென்டமிக் உருவாகப்போகிறது என்றும் கோடிக்கணக்கில் மக்கள் லாக் டவுன்னுக்குள் இருக்கப்போகிறார்கள் என்றும் கனவில் கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டோம். அப்படி இருந்துமே இப்படியும் ஒரு பிரச்சனையை நம்முடைய வாழ்க்கையில் சந்தித்துதான் இருக்கின்றோம். இருந்தாலும் நம்ம வாழ்க்கையின் பிரச்சனைகளை ஒரு வரையறைக்குள் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்சனைகள் பற்றிய நினைப்பு நமக்கு டென்ஷனை அதிகப்படுத்தும். ஒரு சில நேரங்களில் பிரச்சனைகளின் அதிகபட்சத்தை சந்தித்துக்கொண்டு இருப்போம். ஆனால் அடுத்த கட்டத்துக்கு போகாத அளவுக்கு நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரியான பிரச்சனைகள் நம்ம வாழ்க்கைக்குள்ளே வரும்போது அவைகளை சரிபண்ணுவது நம்ம வாழ்க்கையில் நடக்காத காரியம் என்றே முடிவு பண்ணிவிடுவோம். இருந்தாலும் திட்டம் அமைத்து பிரச்சனையை கண்டிப்பாக சரிபண்ண வேண்டும். இங்கே இந்த திட்டம் என்றால் என்ன ? திட்டம் என்றால் பேசிக்காக ஒரு பிரச்சனையை சமாளிக்க செய்ய வேண்டிய செயல்கள் என்று சொல்லலாம். உதாரணத்துக்கு பணத்தை சம்பாதிப்பது. சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்று உண்மையில் நிறைய விஷயங்கள் இந்த அடிப்படையான திட்டமிடலில் அடங்கிவிடும். நான் இதுபோன்று என்னுடைய கருத்துக்களை வலைப்பூவில் எழுதுகிறேன். இதுவே பிரச்சனைகளை சமாளிக்க நான் எடுக்கும் நிறைய முயற்சிகளில் ஒரு முயற்சியாக நான் கருதுகிறேன். நாம் ஒரு பிரச்சனையை கவனிக்காமல் விடும் பட்சத்தில் அந்த பிரச்சனை வரையறைக்கு அடங்காமல் சென்றுவிடுகிறது. பிரச்சனைகள் நம்முடைய மனதை மொத்தமாக ஒரு தேநீர் டம்ளர் போல நிறைத்துவிட்டால் அறிவுபூர்வமாக யோசிக்க போதுமான இடம் நம்முடைய மனதுக்குள் இருப்பது இல்லை. அறிவுபூர்வமான யோசனையை செய்யாமல் போய்விடுகிறோம். இந்த வரையறைகளில் அடங்காத தன்மையை எப்படி நம்முடைய வாழ்க்கையில் நமக்கு வரும் சோதனைகள் கையோடு கொண்டுவந்துகொண்டு இருக்கிறது என்பது எனக்கு இன்னுமே புரியாத புதிராகத்தான் உள்ளது. தொடர்ந்து இந்த வலைப்பூவில் இணைந்து இருங்கள். இன்னும் நிறைய பேசலாம். இந்த வலைப்பூவின் நிறைய போஸ்ட்களை படித்து உங்களின் கருத்துக்களை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்.
No comments:
Post a Comment