Saturday, January 27, 2024

MUSIC TALKS - PUDHU VELLAI MAZHAI INGU POZHIKINDRATHU - VERA LEVEL PAATU !

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே சிறுபறவை நீயானால் உன் வானம் நானே

பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்

நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ

மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத இடம் கூடக் குளிர்கின்றது மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே சிறுபறவை நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...