நம்ம மனித மூளைக்கு ஒரு விஷேசமான சக்தி தேவைப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையின் சந்தோஷமாக இருந்தாலும் சரி , சோகமாக இருந்தாலும் சரி ஒரே வகையில் கையாள வேண்டும். நம்ம வாழ்க்கையில் தோல்விகள் வந்தால் வருத்தப்படவும் கூடாது. வெற்றிகள் வந்தால் சந்தோஷப்படவுமே கூடாது. இது வாழ்க்கையின் சமநிலை என்று அழைக்கப்படுகிறது. சந்தோஷங்களுக்கு கொண்டாட்டம் நடத்தியும் துன்பங்களுக்கு கவலை பகிர்வு நடத்தியும் நாம் என்னதான் சாதிக்க போகிறோம் ? ஒரு ஒரு நாளும் தற்காலிகமான வகையில் எட்டு மணி நேரம் தூங்கக்கூடிய இந்த உடல் ஒரு கட்டத்தில் நிரந்தரமாக தூங்கத்தான் போகிறது. வெற்றிகளை வெற்றி அடையப்போகிறேன் , தோல்விகளை தோற்கடிக்க போகிறேன் என்று மனதுக்குள் இனம் புரியாத பாசிட்டிவ் எண்ணங்களை வைத்து இருக்க வேண்டும். இருந்தாலும் இந்த எண்ணங்களுமே கூட வெற்றியையும் தோல்வியையும் சமமாக பார்க்கும் மனநிலையில் மட்டும் பார்க்க வேண்டும். வெற்றியை உயரத்தில் வைக்கவும் கூடாது, தோல்வியை கடலில் கரைக்கவுமே கூடாது. மேலும் அதிர்ஸ்டத்தை நம்பி பணத்தையும் வளங்களையும் நேரத்தையும் வீணாக செலவு செய்ய வேண்டாம். சமீபத்தில் FREEFIRE என்ற ஆன்ட்ராய்ட் விளையாட்டில் மிகவுமே அதிகமாக பணத்தை செலவு செய்யவேண்டியது இருந்தது. இதுவே எனக்கு கஷ்டமான விஷயம்தான். உங்களுக்கு 10 முறை கட்டங்களை நகர்த்தினால் ஒரு பரிசு கிடைக்கும் , முதல் முறை 10.00 ரூபாய் , இரண்டாவது முறையாக 31.00 ரூபாய் , மூன்றாவது முறையாக 119.00 ரூபாய் என்று கட்டங்களை நகர்த்தி பத்தாவது முறை என்றால் 3000.00 ரூபாய்க்குமே அதிகமான வகையில் செலவு செய்ய வேண்டியது இருக்கும். இந்த மாதிரி விஷயங்களில் பயணத்துக்கு ஆசைப்பட்டு வசியப்பட கூடாது. சந்தோஷங்களுக்கு ஆசைப்பட்டுமே வசியப்பட கூடாது. உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை மிக மிக கவனமாக புரிந்துகொள்ளுங்கள். உங்களுடைய கட்டுப்பாட்டினை மீறுகிறது என்னும் பட்சத்தில் உங்களுடைய வாழ்க்கையை மறுபடியும் உங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து உங்களுடைய வாழ்க்கை உங்களுடையதுதான் என்று நிலைநாட்டுவது மிகவும் சிரமம் நிறைந்த அதிகமாக நேரத்தை வேஸ்ட் பண்ண வைக்கும் செயலாக மாறிவிடும். ஒரு ஒரு முறையும் வாழ்க்கையில் சுவரஸ்யமான விஷயமாக நான் கருதுவது என்னவென்றால் அடுத்த புயல் எப்போது வரும் என்ற விஷயம்தான். நம்ம வாழ்க்கையின் அடுத்த சந்தோஷ தென்றலும் சோகத்தின் சூறாவளியும் எப்போதும் முன்னெச்சரிக்கை இல்லாமல் தாக்குகிறது. இது ஒரு நிலையற்ற சூழ்நிலைதான் யாரையுமே இங்கே மொத்தமாக நம்ப முடியாது. வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கிறது. நம்ம வாழ்க்கையை நம்முடைய அதிகாரத்தின் வலிமைக்குள்ளே வைத்து இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment