Tuesday, January 23, 2024

GENERAL TALKS - கன்ஸ்ட்ரேய்ன்ட்ஸ்ஸை உடைக்க முடியாமல் நடக்கும் பிரச்சனைகள் !!


 


இங்கே எப்போதுமே தடைகளே இல்லாத கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு வெற்றிகரமான சுற்றுச்சூழலைத்தான் நாம் எதிரபார்க்கின்றோம். அப்படிப்பட்ட விஷயங்கள் நமக்கு கிடைக்க தடையாக இருப்பது எல்லைக்கோடுகள்தான். இந்த எல்லைக்கோடுகள் நம்மிடம் போதுமான விஷயங்கள் இல்லாதபோது ஒரு செயலை செய்து அதனால் உருவாகும் பாதகமாக நடக்கும் விளைவுகளில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள மட்டும்தான் போடப்பட்டு வந்தது ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால் நமக்கு சாதகமான நம்மால் வெற்றி அடைய முடிந்த ஒரு சூழ்நிலை நம்முடைய கண்களுக்கு முன்னால் இருந்தாலும் அந்த சூழ்நிலையின் நல்ல தன்மையை தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு எப்போதோ போடப்பட்ட எல்லைகளை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு வாழ்ந்ததால் அறியாமை இருள் சூழ்ந்துகொண்டு நம்மை முன்னேறாமல் தடுக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் ஒளியை விட இருள் அதிகமாக இருக்கலாம். ஆனால் சூரியனுக்கு பயந்து இருளில் இருப்பது போல நல்ல விஷயங்களை தரும் சூழ்நிலைகள் நமக்கு அமைந்தாலும் அதனை கண்டு பயந்தே இருப்பது மிக மிக மோசமான மற்றும் தவறான செயல். உங்களுடைய எல்லைக்கோடுகள் உங்களுக்கு தடுக்கும் சுவர்களாக மாறிவிட எப்போதுமே அனுமதிக்க கூடாது அது உங்களுக்கு நீங்களே சிறையிட்டுக்கொள்ளுவதற்கு சமமானது ஆகும். உங்களுடைய கன்ஸ்ட்ரேய்ன்ட்ஸ் என்னவாக இருந்தாலும் அது எனக்கு தெரியாது. ஆனால் உங்கள் கன்ஸ்ட்ரேய்ன்ட்ஸ்ஸை உடைத்து நொறுக்க கற்றுக்கொள்ளுங்கள். கன்ஸ்ட்ரேய்ன்ட்ஸ் இருந்தால் பிரச்சனைதான். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...