இது ரொம்பவுமே கஷ்டமான பதிவு. நம்ம வாழ்க்கையில் அறிவுப்பூர்வமான முடிவுகளை எடுப்பதில் எப்படி சோதப்புகிறோம் ? உண்மையில் எல்லோருமே அறிவுப்பூர்வமாக முடிவுகளை எடுக்கும் கேப்பாஸிட்டியை நமக்குள்ளே வைத்துதான் இருக்கிறோம், இருந்தாலும் கண்டிப்பாக ரேஜேக்ட் பண்ணப்படும், நாம் இப்படி ஒரு முடிவு எடுத்தால் நம்மை யாருக்குமே பிடிக்காமல் போய்விடும், நமக்கு பின்னாட்களில் யாருமே சப்போர்ட் இருக்க மாட்டார்கள், நேகட்டிவிட்டி என்று 1000 காரணங்கள் சொல்லி அந்த அறிவுபூர்வமான முடிவை எடுக்காமல் நடப்புக்கு எந்த முடிவு நன்றாக பொருந்துகிறதோ அந்த முடிவை எடுத்துககொள்கிறோம். பின்னணியை தெரிந்துகொள்ளாமல் எனக்கு எல்லாமே தெரியும் என்று குருட்டுத்தனமாக வேகத்தில் எடுக்கும் முடிவுகள் எப்போதுமே பிரச்சனைகளைத்தான் கொண்டுவந்து விட்டு இருக்கிறது. இப்போது இருப்பவர்கள் எல்லோருமே ஸ்மார்ட் என்பதால் நாமுமே நிதானமான முறையில் யோசிக்காமல் ஃபாஸ்ட் ஃபுட் போல ஃபாஸ்ட் டேஸிஷன் மேக்கிங் என்று துரித முடிவுகளை எடுப்பதைத்தானே விரும்புகிறோம். இது எல்லாம் எங்கே கொண்டுசென்று விடப்போகிறது என்று தெரியவில்லை. இங்கே அறிவு பயன்படுத்தப்படாமல் இருந்தால்தான் நண்பர்களின் சப்போர்ட் கிடைக்கிறது. இல்லை, இல்லை, நான் ஸ்மார்ட்தான் என்று முடிவுகளை எடுக்க ஆரம்பித்தால் நண்பர்கள் உட்பட நமக்கு இருக்கும் அஸ்ஸோஸியேஷன் எல்லாவற்றையுமே இழந்துதான் நிற்க வேண்டியது இருக்கிறது. மொக்கையான முடிவுகளால் பின்னாட்களில் தாக்கத்தை சந்தித்துக்கொண்டு இருப்பது நாமாக மட்டுமேதான் இருக்கின்றோம். கூட்டத்தில் ஒருவராக யாருடைய கண்ணுக்குமே தெரியாமல் போகவேண்டும் என்றால் அறிவை பயன்படுத்தாமலே இருந்துவிடலாம். வாழ்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் (அதிர்ஷ்டம் என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் வாழ்க்கூறு என்று உங்களுக்கு தெரியுமா ?) நீங்கள் என்ன மொக்கையான முடிவுகளை எடுத்தாலும் வாழ்க்கை சூப்பர்ராக அமைந்துவிடுகிறது. வாழ்க்கையில் காம்ப்ளிக்கேட்டடான விஷயங்களை தேர்ந்தெடுப்பதை விட்டுவிட்டு ஸிம்பில் விஷயங்களை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். காரணம் என்னவென்றால் "அறிவு" எப்போதுமே ஒரு எதிர்ப்பை கொண்டுவந்துவிடுகிறது. இன்னும் நிறைய பேசலாம். இந்த வலைப்பூவின் நிறைய போஸ்ட்களை படித்து உங்களின் கருத்துக்களை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !
ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...
-
ஊதா ஊதா ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் சொல்லடி அவனுக்கு நான் ச...
-
பணமும் நம்பிக்கை துரோகங்களும் - இங்கே மனிதன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அவனை எப்போழுதுமே கைவிடுவதில்லை. காரணம் என்னவென்றால் அ...
No comments:
Post a Comment