செவ்வாய், 16 ஜனவரி, 2024

MUSIC TALKS - UNNAI PAARTHA PINBU NAAN - VERA LEVEL PAATU !!

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே 

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே 

எவளோ ? எவளோ ? என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் 

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்  இளமை இளமை பாதித்தேன் 

கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே 

இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே 

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே !!

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே !!

ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன் உன்னைப் பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன் 

என் உயிரில் நீ பாதி என்று உன் கண்மணியில் நான் கண்டு கொண்டேன் 

எத்தனை பெண்களைக் கடந்திருப்பேன் இப்படி என் மனம் துடித்ததில்லை 

இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு உறங்கச் சொல்வதில் நியாயமில்லை 

நீ வருவாயோ இல்லை மறைவாயோ ? தன்னைத் தருவாயோ ? இல்லை கரைவாயோ ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே !!

நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும் உன்னைத் தொடத் துணிந்தேன் என்ன துணிச்சலடி ?

மணமகளாய் உன்னைப் பார்த்த பின்னும் உன்னைச் சிறையெடுக்க மனம் துடிக்குதடி 

மரபு வேலிக்குள் நீ இருக்க மறக்க நினைக்கிறேன் முடியவில்லை 

இமயமலை என்று தெரிந்த பின்னும் எறும்பின் ஆசையோ அடங்கவில்லை 

நீ வருவாயோ இல்லை மறைவாயோ ? தன்னைத் தருவாயோ ? இல்லை கரைவாயோ ?

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே !!

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே 

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே 

எவளோ ? எவளோ ? என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன் 

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்  இளமை இளமை பாதித்தேன் 

கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே 

இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே 

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே !!

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...