Friday, January 12, 2024

TAMIL TALKS - EP.13 - கேன்ஸர் நோயை தடுக்க ஏதாவது பண்ண வேண்டும் !




 இன்னைக்கு தேதிக்கு உலக அளவில் சுற்றுச்சூழலை காப்பாற்ற வேண்டும் என்ற அபிப்ராயம் மிக மிக குறைவாக காணப்படுகிறது. இந்த மாதிரி க்ளோபலாக என்விராய்ன்மேன்ட்டல் கண்டிஷன்களில் உருவாகும் பிரச்சனையை யாருமே கண்டுகொள்வது இல்லை. கிளைமேட் மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த மாதிரி நிலைப்பாடு தொடர்ந்து நம்முடைய பூமியில் இருந்துகொண்டே இருந்தால் வருங்காலத்தில் உணவில் நச்சு இருக்கிறது என்று தெரிந்துமே நாம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்ற ஒரு கட்டாயத்தில் மொத்த உலகமும் உடல்நலமற்ற உலகமாக மாறிவிடும். இப்படி இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமா சொல்லுங்கள். கடந்த 35 வருடங்களில் டெக்னாலஜியின் வளர்ச்சி மிக மிக அபரிமிதமானது. இங்கே டெக்னாலஜியை மட்டுமே நம்பிக்கொண்டு வளர்ச்சியை கைவிட்டுவிட கூடாது. இந்த விஷயம் முக்கியமானதுதான். கேன்ஸர் போன்ற நோய்கள் தாக்க பிளாஸ்டிக் மாசுபாடு மிகவும் முக்கியமான காரணம். இந்த உலகத்தில் நிறைய பணம் உங்களிடம் இருந்தால் கண்டிப்பாக ஒரு கேன்ஸர் தடுப்பு மருத்துவ கட்டிடத்தை கட்டவேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இங்கே அதிகமான பணத்தை வைத்து வெற்றி அடைய முடிகிறது. ஆனால் அந்த வெற்றி எல்லோருக்குமே கிடைக்காது அல்லவா. ஒரு சில பேருக்கு வாழ்க்கை ஒரு சோதனையாக முடிந்துவிடுகிறது. இந்த கஷ்டமான நோயில் இருந்து தப்பிக்க வழியே இல்லை என்ற காரணத்தால் இந்த நோய்க்கான தீர்வை எப்படியாவது கண்டறிந்தே ஆகவேண்டும். இதனால்தான் சொல்கிறேன். உங்களுக்கு அதிகமாக வசதி வாய்ப்பு இருந்தால் கேன்ஸர் தடுப்புக்கு உங்களால் முடிந்த விஷயத்தை பண்ணுங்கள். நம்முடைய வலைப்பூ இன்னுமே சமூகத்தின் மேல் அக்கறை உள்ள இடம்தான். கண்டிப்பாக நல்லா இருப்போம் நல்லா இருப்போம் எல்லோருமே நல்லா இருப்போம் என்று தொடங்கப்படும் ஒரு புத்தாண்டு நம்மை போன்ற இன்னொரு மனிதருக்கு கடைசி புத்தாண்டாக இருக்க நாம் அனுமதிக்க கூடாது. உங்களுடைய முயற்சிகளை தொடங்குங்கள். கடவுள் உங்களுக்கு கண்டிப்பாக சப்போர்ட் பண்ணுவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...