ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க நிறைய தகவல்களை தெரிந்துகொள்ளவேண்டும் இவ்வாறு தெரிந்துகொள்ளப்படும் தகவல்கள் கண்களுக்கு தெரியாத ஒரு மாயாஜாலாமான சுவராக வேலை செய்து நிறுவனத்துக்கு வரும் பிரச்சனைகளை கண்டிப்பாக தீர்த்து வைக்கிறது. ஒரு மோட்டார்பைக்கை நம்பி ஆரம்பித்த நிறுவனம் கூட அடுத்த இருபது வருடங்களில் தொழிற்ப்பட்டறை நிறுவனமாக மாறிவிடலாம். கடினமாக நெருப்பு போல வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அந்த நிறுவனங்களை மிகப்பெரிய உயரத்துக்கு கொண்டுசென்றுகொண்டு இருக்கின்றன. உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் நிறைய தொழிற்சாலைகளுக்கு சென்றால் அங்கே நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் இன்னொருவருக்கு விட்டுக்கொடுக்காமல் ஈடுபாடுடன் செய்துகொண்டு இருந்தால் செய்து முடித்த வேலைகளின் பயனாக நிறைய பணம் கிடைக்கிறது. அந்த பணம் பிற்காலத்தில் நிறுவனத்தை மேம்படுத்த உதவுகிறது. ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது ஒரு நாள் முயற்சியாக எப்போதுமே இருப்பது இல்லை. மொத்தமாக 10 ஆண்டுகளுக்கான முயற்சியாக இருக்கிறது. நாம் இது போன்று அதிகமாக வருடக்கணக்கில் கஷ்டப்பட்டால்தான் வெற்றியை அடைய முடியும் , தோல்விகளை தடுக்க முடியும் என்பது எழுதப்படாத சட்டமாக மாறிவிட்டது. இருந்தாலுமே பிளாக்பெர்ரி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து பில்லியன் டாலர் என்டிட்டியாக மாற்றவேண்டும் என்ற போராட்டம் மிகவும் இன்ஸ்பெரிங் ஆன ஒரு விஷயம். வெறும் வாய் வார்த்தைகளால் சொல்ல முடியாது. நீங்கள் இப்போது என்ன வேலைகளை செய்துகொண்டு இருந்தாலும் அப்படியே விட்டுவிட்டு நேராக பிளாக்பெர்ரி என்ற 2023 ல் வெளிவந்த கனடா திரைப்படத்தை பாருங்கள்.
No comments:
Post a Comment