பொதுவாக நம்ம ஊரு அரசியல் மேல் வைக்கப்படும் கடுமையான விமர்சனத்தை கொஞ்சம் கமர்ஷியல் படங்களின் ஸ்டைலில் கொடுத்த படம்தான் இந்த நோட்டா , விஜய் தேவரகொண்டா மையமாக இருக்கும் கதாப்பாத்திரம் எடுத்து நடிக்க ஒரு பக்கவான அரசியல் திரைப்படம். ஒரு அரசியல் நுணுக்கங்கள் கற்றுக்கொள்ள நேரம் இல்லாத ஒரு நெருக்கடியான அரசியல் சூழ்நிலையில் இதுவரைக்கும் பணக்கார இளைஞராக வாழ்ந்த ஒருவர் கட்டாயத்தால் பெரிய பொறுப்பு எடுத்துக்கொண்டு அரசியலில் பயணிக்கும்போது என்னென்ன பிரச்சனைகளை சமாளிக்கிறார் என்றும் அந்த பிரச்சனைகளை எப்படி வெற்றி அடைந்து கொடியை நிலைநாட்டிக்காட்டுகிறார் என்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை , நிதானமான நகர்வுக்கு கதையை ஃபோகஸ் பண்ணி நகரும் இந்த திரைக்கதையில் பாடல்கள் நன்றாகத்தான் உள்ளது ஆனால் கதைக்கு அவ்வளவாக அவசியப்படவில்லை. நடிப்பு கண்டிப்பாக பெஸ்ட்தான். புரொடக்ஷன் வேல்யூ அதிகம் என்பதால் சப்போர்டிங் ரோல்ஸ் பண்ணியிருக்கும் எல்லோருமே டீஸென்ட் பெர்ஃப்பார்மைன்ஸ் கொடுத்து இருப்பதாக கணக்கு காட்டினாலும் இன்னமும் சிறப்பாக இந்த படத்துக்காக கொடுத்து இருந்திருக்கலாம். படத்துக்கு வெற்றி அடைவதற்கான எல்லா விஷயங்களும் இருந்தாலும் படம் பாக்ஸ் ஆபீஸ் என்ற வகையில் கொஞ்சம் டிஸப்பாய்ண்டமேன்ட்தான். இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.
No comments:
Post a Comment