Saturday, January 6, 2024

CINEMA TALKS - ENGEYUM KADHAL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!




 இந்த உலகத்தின் இரண்டு வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்துகொண்டு இருந்தாலும் இருவருக்கும் வேறு வேறு மனது இருந்தாலும் சந்தித்து பேசிக்கொள்ளும்போது கிடைக்கும் நட்பு கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மாறுவதுதான் இந்த எங்கேயும் காதல் படத்தின் கதை. இளம் தொழில் அதிபர் கமல் ரொமான்டிக் ஹீரோவாக சக்ஸஸ்ஃபுல் பிஸ்னஸ் சாம்ராஜ்யம் நடத்தி வருகிறார். இவரை கொல்ல வந்த ஒரு நபரிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கும்போது தான் கயலை முதல் முதலாக பார்க்கிறார். அடுத்தடுத்து நடக்கும் சந்திப்புகள் நல்ல நட்புறவை கொடுக்க கயல் இப்போது கமல் மேலே உயிரை வைத்து இருந்தாலும் சந்தர்ப்பம் சூழ்நிலையால் காதல் பிரிந்துவிட கிளைமாக்ஸ் வரைக்குமே கதை ஒரு ரொமாண்டிக் மெலோடிராமாவாகவே செல்கிறது. விஷ்வலாக பெர்ஃப்பெக்டாக இருக்கும் திரைக்கதையில் காமேடி ஸீக்வன்ஸ் சம்பந்தம் இல்லாமல் இருப்பதாகத்தான் படுகிறது. இந்த படம் ரிலீஸ் ஆன பாய்ண்ட் ஆஃப் வியூவில் நல்ல ரொமான்ஸ் நிறைந்த ஒரு கமெர்ஷியல் படமாக புதுமை நிறைந்து காணப்பட்டாலும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் வொர்க் பண்ணியிருக்கலாம் என்பதுதான் வலைப்பூ சார்பாக என்னுடைய தனிப்பட்ட கருத்து. பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் நல்ல க்ரியேட்டிவ் ஸ்பேஸ் இருக்கிறது. க்ளைமாக்ஸ் நிறைவாக இருக்கிறது. காமேடி போர்ஷன்கள் தவிர்த்து கதையின் எந்த பகுதியையும் லோகேஷன் மற்றும் காஸ்ட்யூம் டிஸைன்க்காக மட்டுமே கூட பார்க்கலாம். இங்கே எதிர்பார்ப்புகளை அளவுக்கு அதிகமாக வைக்காமல் ஒரு சாதாரணமான ரொமான்ஸ் படமாக இந்த படத்தை கண்டிப்பாக பார்க்கலாம்‌. இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.

No comments:

GENERAL TALKS - இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும்

1. ஒரு விஷயம் உன்னுடைய சாப்பாடு பற்றியது என்றால் அதற்காக நீ EXTREME-க்கு வேண்டுமென்றாலும் செல்லலாம் ! 2. இந்த உலகத்தில் எப்பொழுதும் மூளையை ப...