Tuesday, January 23, 2024

TAMIL TALKS EP. 27 - இன்பினிட்டி பட்ஜெட் - யோசித்து பாருங்கள் !!

 



உங்களிடம் ஒரு இன்பினிட்டி பட்ஜெட் இருந்தால் நீங்கள் பண்ண வேண்டிய விஷயங்கள் என்ன ? உங்களிடம் போதுமான பணம் இருக்கிறது என்னும் பட்சத்தில் உங்களிடம் இந்த பணத்தை இப்படித்தான் செலவு பண்ணவேண்டும் என்ற ஒரு சரியான திட்டம் தேவைப்படுகிறது. இதுவே உங்களுடைய பட்ஜெட் ஒரு இன்பினிட்டியாக இருந்தால் முதல் மாதத்தில் மட்டும் நீங்கள் செய்ய தகுந்த யோசனைகளாக என்னுடைய தனிப்பட்ட கருத்துக்களை இப்போது நான் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். உங்களுடைய முதல் இன்வெஸ்ட்மேன்ட் ஒரு சொந்த வீடாக மட்டும்தான் இருக்க வேண்டும். உங்களுடைய மின்சார பயன்பாட்டுக்கு எப்படியாவது சோலார் பேனல்களை அமைத்துவிடுங்கள். உங்களுடைய மின்கட்டணத்தில் கண்டிப்பாக ஒரு கணிசமான தொகையை உங்களால் சேமிக்க முடியும். இன்பினிட்டி பட்ஜெட் இருக்கிறது சேகரிக்க என்ன அவசியம் வந்துள்ளது என்று எல்லாமே யோசிக்க வேண்டாம். இரண்டாவது விஷயம் ஆடிட்டிங். உங்களுடைய கணக்கு வழக்குகளை மிகவும் சரியானதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு உதாரணத்துக்கு உங்களுடைய கைகளில் ஒரு 5000 ரூபாய் தொகை இருக்கலாம். இந்த மொத்த தொகை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக செலவாகிறது என்பதை நீங்கள் கவனித்தால்லே கணக்கு வழக்குகளை உங்களால் சிரமம் இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியும். உங்களுடைய செலவுகளில் கவனம் வேண்டும். உங்களுடைய பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படும்போது உங்களுக்கு அதிகமாக பொறுமை இருக்கும்பட்சத்தில் விவசாயம் மற்றும் மரங்கள் வளர்ப்பு , கட்டிடங்கள் போன்ற விஷயங்களில் முதலீடு பண்ணலாம். ஆனால் உங்களுக்கு அவ்வளவு பொறுமை இல்லை என்றால் இலாப நோக்கம் மட்டுமே உங்களுக்கு போதுமானது என்றால் தொழில் துறைகளில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். கணிப்பொறி சார்ந்த துறைகள் மற்றும் சாஃப்ட்வேர் துறைகள் கண்டிப்பாக எதிர்காலத்தில் நிறைய கவனம் குவியும் துறையாக இருப்பதால் அங்கேயும் உங்களுடைய முதலீடுகளை செய்யலாம். இப்போது ஒரு முக்கியமான கட்டத்துக்கு வருகிறோம் , அதுதான் வணிகம். உங்களுடைய நோக்கம் வணிகம் என்றால் நீங்கள் ஒரு விஷயத்தை தொடங்கும்போதே அந்த விஷயம் எப்படி முடிக்கப்பட வேண்டும் என்ற கணிப்பை உருவாக்கிவிட்டுதான் களத்தில் இறங்க வேண்டும். வணிகம் ஒரு மிக கடினமான துறையாக இருக்கிறது. உங்களிடம் இன்பினிட்டி இருந்தாலும் வணிகத்துக்கு அது போதாது. உங்களுடைய வாழ்க்கையில் பொருட்களை வாங்குவது என்பதை விட உங்களுக்கு தேவை என்று வந்தால் தற்காலிக உரிமையில் எடுத்துக்கொள்வது எவ்வளவோ சிறப்பானது. இந்த பொருளை நீங்கள் 10 வருடங்கள் மட்டும்தான் பயன்படுத்த போகின்றீர்கள் என்றால் எதுக்காக ஒரு வாழ்நாள் தொகையை நீங்கள் கொடுக்க வேண்டும் ? உங்களுடைய பரிவர்த்தனைகளை தெளிவாக வைத்து இருந்தால் எல்லாமே நன்றாகத்தான் நடக்கும். இப்போது தனியாக நிறுவனம் தொடங்குவதை பற்றி பேசுவோம், ஒரு நிறுவனம் தொடங்கி நடத்துவதில் இருக்கும் மிகப்பெரிய சவால் போட்டியும் பொறாமையும்தான். ஒரு நிறுவனம் தொடர்ந்து 5 ஆண்டுகள் தொழில் துறையில் நிலைத்தால் அதுவே பெரிய சாதனையாகத்தான் கருதப்படுகிறது. மேற்கொண்டு நான் நிறுவன அமைப்புக்காக பரிந்துரை பண்ணும் விஷயம் என்னவென்றால் நீங்கள் செய்ய வேண்டிய செயல்களில் முதல் செயல் முதல் கடைசி செயல் வரை எல்லாமே ஒரு திட்டத்துக்குள் வைத்து இருங்கள். அப்படி நீங்கள் திட்டத்துக்குள் எல்லா விஷயங்களையும் கொண்டுவந்துவிட்டால் செயல்பாடு மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஒரு இன்பினிட்டி பட்ஜெட் என்றாலும் நேரத்துக்கான மேலான்மை மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. வெற்றியை பற்றி மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும் உங்களுடைய கைகளில் எதுவுமே இல்லை என்றால் நீங்கள் நிறைய மாதங்கள் , நிறைய நாட்கள் , நிறைய மணி நேரங்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் அல்லது உங்களுக்காக உங்களுடைய நிறுவனத்தில் இருப்பவர்கள் தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும். வேலை செய்தால்தான் வெற்றியை அடைய முடியும் , சும்மா இருந்தால் உங்களுடைய கைகளில் இருக்கும் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டுதான் வாழவேண்டியது இருக்கும். வேலை உங்களுக்காக இருக்கும் ஒரு அடிப்படையான ஒரு விஷயம். நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பார்த்தவரையில் வேலை செய்யாமல் இருப்பவர்கள் நிரந்தரமாக நிறைய விஷயங்களை இழந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். நிரந்தரமான இழப்பு நிறைய நேரங்களில் என்ன செய்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பாக மட்டும்தான் இருக்கிறது. நான் நிறைய நேரங்களில் சொல்வது போன்று தனக்கு நடக்கும் கெட்ட விஷயங்களை கூட தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்பவரகள்தான் வாழ்க்கையில் வெற்றியை தக்கவைக்க முடியும். இந்த வலைப்பூ பதிவு ஒரு ஸேம்பில்தான். உங்களிடம் உண்மையில் இன்பினிட்டி பட்ஜெட் கொண்டுவரும் அளவுக்கு சக்திகள் பின்னாட்களில் கிடைக்குமா என்பது எனக்கு தெரியாது ஆனால் ஒரு இன்பினிட்டி பட்ஜெட்டுக்கான எல்லா செய்ய வேண்டிய செயல்களையும் கண்டிப்பாக ஒரு பட்டியல் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...