Sunday, January 21, 2024

TAMIL TALKS EP.19 - என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ள முடியாது !




 


இங்கே எல்லோருமே நமக்கு சப்போர்ட் பண்ணினால் கனவுகளில் வருவது போல அயன் படத்தின் தூவும் பூமழை நெஞ்சிலே பாடலை பின்னணி இசையாக போட்டுக்கொண்டு ஒரு சுற்றுலா பேருந்தை விலைக்கு வாங்கி சந்தோஷமாக நிறைய இடங்களுக்கு சென்று வாழ்க்கையை கொண்டாடலாம். இங்கே மனிதர்கள் சப்போர்ட் பண்ணாமல் போக காரணம் என்னவென்றால் அடிப்படையில் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை தேவையே இல்லை என்று ஒரு மனநிலை இருக்கும். ஒரு சின்ன குருவி கூட்டுக்குள் வாழ்ந்தால் மட்டுமே போதும் என்று ஒரு மனப்பான்மை அவர்களுக்குள்ளே வந்துவிடும். வாழ்க்கையில் அனுபவிப்பது என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்க்கையில் நிறைய விஷயங்களை தொலைத்துவிடுவார்கள்.  ஒரு நிறுவனத்துடைய மேம்பாட்டுக்காக வேலை செய்பவர்கள் எந்த ஒரு எல்லைக்கும் செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். நிறுவனம் அப்படி ஒரு ஃப்ரஜைல்லான கவனமாக கையாளவேண்டிய ஒரு அமைப்பு , ஒரு நிறுவனத்தை செயல்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி நகர்த்துவது என்பது மிக மிக நுணுக்கமான பிராசஸ். அடிப்படையில் நிறுவனம் என்பது முன்னேற்றத்தை கொடுக்கவேண்டும் என்பதால் நம்ம வாழ்க்கை எத்தகைய பாதிப்புகளை அடைந்தாலும் பரவாயில்லை என்று நம்முடைய பாதுகாப்பையும் விட்டுவிட்டு வலியையும் வேதனையையும் அனுபவிக்க தயாராகிறோம். நம்ம வாழ்க்கையில் எதனால் ஒரு நிறுவனத்தை நம்முடைய உறவினர் போல அல்லது நண்பரை போல பார்க்கின்றோம் என்று நமக்கே தெரியாது ஆனால் நம்மால் அப்படி ஒரு இணைப்பை ஒரு நிறுவனத்தை தொடங்கும்போது உருவாக்க முடிகிறது. ஒரு ஒரு நிறுவனத்தை தொடங்கவும் ஒரு ஒரு இன்ஸ்பிரேஷன் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அந்த வகையில் தொழில் அளவில் நான் இன்ஸ்பிரேஷன்னாக சொல்லும் ஒரு விஷயம் நிறைய எழுதுங்கள் என்பதுதான், குறிப்பாக உங்களுடைய நிறுவனத்தை பற்றி நிறையவே எழுதுங்கள். உங்களுடைய எழுத்துக்கள் எந்த ஒரு கட்டத்திலும் நிறுவனம் குறித்த ஒரு நல்ல இண்டெலிஜன்ஸ்ஸை உங்களுக்கு கொடுக்கிறது. சூரியனின் முன்னால் சிறுதூசுக்கு என்ன அருகதை என்று மட்டமான வகையில் உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் நினைத்துவிடாதீர்கள். அந்த சிறு தூசுக்கு சூரியனை விட அதிகமாக கிராவிட்டேஷனல் சக்தியும் மின்காந்த சக்தியும் இருக்கிறது என்றானால் சூரியனை விட அதிகமான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். ஒரு நிறுவனத்துடைய மேம்பாடு என்று வரும்போது நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை நம்முடைய மூளையை பயன்படுத்தி வெற்றியடைய கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும். நிறுவனத்தை நடத்துவது ஒரு பாரம் என்றால் அதே நிறுவனத்தை காப்பாற்றுவது இன்னமும் பெரிய பாரம். ஒரு ஒரு நிறுவனத்திலும் இனிமேல் ஜெயித்தாலும் தோற்றாலும் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று ஒரு நிலைப்பாடு உருவாகிறது. இருந்தாலும் நிறுவனம் என்பது நமக்கு அப்புறமாகவும் வாழ்க்கையில் நகரக்கூடிய ஒரு விஷயம். ஒரு பயணமாக நிறுவனத்தின் தேவை எப்போதுமே முடிவதே இல்லை. நிறுவனம் அதனுடைய பயணத்தை தொடர்கிறது தொடர்கிறது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நம்ம நிறுவனத்தின் மேலே நமக்கு இருக்கும் அன்பு நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் துணிவாக போராடும் ஒரு பாதுகாப்பு அமைப்பாக நம்மையே மாற்றிவிடுவதுமே நிறுவனங்கள் பண்ணும் இன்னொரு ஆச்சரியமான விஷயம். அதிகமான இலாபத்தை சம்பாதிக்க ஒரு அமைப்பாக நாம் கஷ்டப்படும்போது அந்த நிறுவனம் நமக்கென்று ஒரு இலாப தொகையை கொடுப்பதோடு அடையாளத்தையும் கொடுத்துவிடுகிறது. இது சம்மந்தமாக யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் சொன்ன கருத்து எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நாம் இல்லை என்றால் இன்னொருவர் , இன்னொருவர் இல்லையென்றால் அதே இடத்தில் வேறு ஒருவர் என்று நம்ம வாழ்க்கை ஒருவருடைய இடத்தை இன்னொருவருக்கு கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்த இடம் எனக்கு இப்போது கிடைக்கிறது என்றால் நான் இப்போதே பிரயோஜனப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் பிரச்சனையாக மட்டும்தான் அமையும். நமக்கு சப்போர்ட் பண்ண யாருமே இல்லை என்ற நிலைப்பாடு புதுவரவு அல்ல. காலாகாலமாக நல்ல விஷயங்களை செய்ய முயற்சித்து போராடும் எவராக இருந்தாலும் நன்றாகத்தான் இந்த உண்மையை ஒரு கட்டத்தில் புரிந்துகொள்வார்கள். 


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...