சனி, 27 ஜனவரி, 2024

CINEMA TALKS - SOODHU KAVVUM - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!


வேலை வெட்டி இல்லாமல் இருக்கும் பொறுப்பற்ற இளைஞர்கள் ஒரு கட்டத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு சின்ன சின்ன கடத்தல் வேளைகளில் ஈடுபடவே பின்னாட்களில்  ஒரு பெரிய பஞ்சாயத்தில் மாட்டிக்கொண்டு சிக்கித்தவித்து வெளியே வரும் கலகலப்பான கதையை கொண்ட ஒரு பொழுதுபோக்கு படைப்பு இந்த சூது கவ்வும். விஜய் சேதுபதி , பாபி ஸிம்மாஹ் , அசோக் செல்வன் , ரமேஷ் திலக் , எம் எஸ் பாஸ்கர் , சச்சதா ஷெட்டி , மற்றும் கருணாகரன் என்று  பெஸ்ட் ஆஃப் பெஸ்ட் ஸ்டார்கள் நடிப்பில் மிக்கவுமே பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு விறுவிறுப்பு படத்தில் இருக்கிறது. பொதுவாக படத்தை முந்தைய பாகம் பிந்தைய பாகம் என்று எல்லாம் பிரிக்காமல் படமாக மட்டும் பார்க்க வேண்டும். காமிரா வொர்க் , காஸ்ட்யூம் சாய்ஸ் , சப்போர்டிங் ஆக்டர்ஸ் என்று எல்லோருமே பிரமாதமாக பண்ணி இருக்கிறார்கள். ஒரு நம்பிக்கையான க்ரைம் டார்க் ஹியூமரை இந்த படத்தில் பார்க்கலாம். இந்த படம் போலவே இன்னொரு படம் என்றால் மூடர் கூடம் படத்தை சொல்லலாம். கான்ஸேப்ட் அடிப்படையில் இந்த படம் ஸ்மார்ட் மக்களின் கூடம் என்று சிறப்பு டைட்டில் கொடுத்து அன்போடு அழைக்கப்படுவாய் என்று பாராட்டும் அளவுக்கு அவ்வளவு அருமையாக கிரியேட் பண்ணப்பட்ட படைப்பு. நலன் குமாரசாமி எண்டர்டெயின்மெண்ட்க்கு சிறப்பான உத்திரவாதம் கொடுத்துள்ள ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். மியூசிக் ஸ்கோர் பிரமாதம். படத்தின் காட்சிகளுக்கு நல்ல சப்போர்ட் மியூசிக் கொடுத்து இருக்கிறது. கேரக்ட்டர் டேவலப்மென்ட் வேற லெவல்லில் இந்த படத்தில் இருக்கிறது. கண்டிப்பாக இந்த படத்தை பாருங்கள் !!

கருத்துகள் இல்லை:

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...