Thursday, January 25, 2024

GENERAL TALKS - வெற்றியை மட்டும் விட்டுக்கொடுக்க கூடாது !


 

நம்ம வாழ்க்கையில் கடந்த காலம் நன்றாக இல்லை என்ற காரணத்தால் நம்ம வாழ்க்கையுடைய வருங்கால வெற்றியை விட்டுக்கொடுக்க கூடாது. நம்ம வாழ்க்கையில் நடந்த கடினமான சம்பவங்களின் தாக்கம்தான் நமக்கான தோல்விகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்றால் அத்தகைய கடினமாக இருக்கும் சம்பவங்களை ஒரு பேக்கேஜ் போட்டு தனியாக வைத்துவிடுங்கள் , இந்த பிரச்சனையையே சமாளிக்க முடியவில்லை என்றால் இதனை விடவும் பெரிய பிரச்சனைகளை நாம் எப்படி சமாளிக்க போகிறோம் ? நம்முடைய வாழ்க்கை எப்போதுமே நமக்கான ஒரு ஆடுகளம் என்றே இருக்கிறது. நம்முடைய காலத்தோடு நாம் விளையாடிக்கொண்டே இருக்கிறோம். இந்த விளையாட்டில் நம்மால் ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் நமக்கு ஜெயிக்க சக்தி இல்லை என்று தெரிந்தும் நாம் விளையாட்டில் வெற்றியை அடைய நம்மால் முடிந்த முயற்சிகளை பண்ணிக்கொண்டுதான் இருக்கின்றோம். நாம் சோர்வு அடையக்கூடாது. நம்மை விட வலிமையானவர்களை கூட திறன்மிக்க சாமர்த்தியத்தால் தோற்கடித்துவிடலாம். நம்ம வாழ்க்கையில் இருக்கும் போட்டி பொறாமைகளுக்கு மத்தியில் நேர்மை உங்களுக்கு இப்போது எல்லாம் அவ்வளவாக கைகொடுப்பது இல்லை. தொழில் முறையில் நேர்மை மிகவுமே அவசியமானதுதான் ஆனால் உங்களுக்கு யாராவது பணம் கொடுக்க வேண்டியது இருந்தால் அந்த பணத்தை விட்டுக்கொடுப்பது என்பது அடிப்படையில் சாத்தியமற்றது. உங்களுடைய நேர்மையால் நீங்கள் எல்லோரும் பயன்படுத்திக்கொள்ளும் அப்பாவியாக மாறிவிட கூடாது என்பதில் கவனமாக இருங்கள். இங்கே நடந்துகொண்டு இருப்பது நூறு சதவீதம் நேர்மையான போட்டி என்று சொல்ல முடியுமா என்ன ? நம்ம வாழ்க்கையில் நம்ம இழப்புகள் அதிகமாக மாறும்போதும் இழந்த விஷயங்கள் நமக்கு கிடைக்கவே கிடைக்காது என்னும்போதும் நம்முடைய வாழ்க்கை நமக்கு தினம் தினம் துயரத்தை கொடுக்கிறது என்பதால் நேர்மை என்ற விஷயத்தை நாம் தவறாக புரிந்துகொள்கிறோம். ஒரு பெரிய குத்துச்சண்டையில் நேர்மையாக இருக்க வேண்டும் என்பது வலிகளை பொறுத்துக்கொண்டு மன்னித்துவிடுவதா என்ன ? இது ஒரு போட்டி , உங்களை தாக்குபவர்களை நீங்களுமே தாக்க கடமைப்பட்டு உள்ளீர்கள். இந்த உலகத்தில் நீங்கள் நல்ல விஷயங்களை செய்தால் யாருமே உங்களை பாராட்டப்போவது இல்லை. இருந்தாலும் இதனை விடவும் மோசமான விஷயம் நீங்கள் கெட்ட விஷயங்களை செய்தால் யாருமே கண்டுகொள்ளப்போவதும் இல்லை.  உங்களுடைய பணம் உங்களிடம் இருக்கும் பணத்தை விடவும் இன்னுமே அதிகமான பணத்தை கொண்டுவந்துகொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் பணம் நன்றாக உங்களுடைய வாழ்க்கையை மாற்றும். நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை அடைய எப்போதுமே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அளவில் சரியான பாதையை தெரிந்தெடுத்து நகர்ந்துகொண்டு இருக்க வேண்டும், உங்களுக்கு இந்த பாதையில் வெற்றியை அடைந்துவிடுவேன் என்று நம்பிக்கை உள்ளது ஆனால் பாதை நம்பகத்தன்மையான முறையில் இல்லை மேலும் அறிவியலின் அடிப்படையில் அந்த பாதை வெற்றியை தராது என்றால் உங்களுடைய பொன்னான நேரத்தை அப்படி ஒரு மட்டமான பாதையில் சென்று வேஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்க வேண்டாம். நடந்த எல்லா விஷயங்களுக்குமே கடந்த கால ரெகார்ட்ஸ்களை கவனித்தால் நல்ல தரமான ரிப்போர்ட்டை உங்களால் ஜெனெரேஷன் பண்ண முடியும். உங்களுடைய கடந்த காலத்தை பற்றி நீங்களே செய்துகொண்டு இருக்கும் அணுகுமுறை உங்களுக்கு எப்போதுமே பயனுள்ளதாக இருப்பதாக மாற்றிக்கொள்ள வேண்டும். உங்களுடைய கடந்த காலத்தில் நடந்த நெகட்டிவ் விஷயங்களாக இருந்தாலும் பாசிட்டிவ் விஷயங்களாக இருந்தாலும் எப்போதுமே உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்காலம்தான் முக்கியம். கடந்த காலம் முக்கியம் அல்ல.  

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...