Monday, January 22, 2024

TAMIL TALKS EP. 20 - காலடித்தடங்கள் பாதையாக மாறவேண்டும் !!

 



நிறைய நேரங்களில் GTA VICE CITY என்ற இந்த குறிப்பிட்ட கணினி விளையாட்டு மட்டுமே மிகவுமே அதிகமான பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த கேம் வெற்றி அடைய தேவைப்பட்ட 2 விஷயங்களாக என்னுடைய தனிப்பட்ட கருத்தாக நான் கருதுவது. 1. குறை வைக்காத ஓபன் வேர்ல்ட் சிஸ்டெம் 2. கடைசி வரைக்குமே ஒரே ஒரு ஹீரோ , அவனுடைய வாழ்க்கை மட்டும்தான் இந்த கணினி விளையாட்டில் இருக்கிறது. நல்லதோ இல்லைன்னா கெட்டதோ எல்லாமே அவனுடைய ஒருவனுடைய வாழ்க்கையை பொறுத்து மட்டுமேதான் அமையும். நம்ம வாழ்க்கையில் இந்த மாதிரியான விஷயங்கள் முக்கியமே இல்லை என்று நினைப்போம் ஆனால் இவைகள்தான் நம்ம வாழ்க்கையில் முக்கியமானது. நாம் நம்பிக்கொண்டு இருக்கும் எல்லா விஷயங்களுமே நமக்கு துரோகம் செய்யவும் இல்லையென்றால் நமக்கு உதவ முடியாது என்று கைகளை நழுவிச்செல்லவும் நமக்கு எப்போதுமே சப்போர்ட்டாக இருக்கும் ஒரு நபர் யார் என்று தெரியுமா ? அது நாம் மட்டும்தான். நமக்கென்று யாராவது இந்த உலகத்தில் இருப்பார்களா என்றும் கடைசிவரைக்கும் நம்மை சப்போர்ட் பண்ணுவார்களா என்றும் நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்பார்த்துக்கொண்டே இருப்போம், உதாரணத்துக்கு சிறிய வயதில் பைக் ஓட்டுவதாக கற்பனை செய்து அந்த கற்பனை செய்த வண்டியில் இருந்தும் கீழே விழுந்து ஆக்ஸிடேன்ட் ஆகலாம் அப்போது நம்மை தூக்கிவிட யார் முன்வந்தார் ? நாம் மட்டுமே நமக்கு நாமே என்று தனித்து நின்று காட்டி வெற்றி அடைந்து இருக்கிறோம். எத்தனை முறை கஷ்டங்களுக்காக மனது உடைந்து ஒரு இடத்தில் அசையாமல் நின்றுவிடுகிறோம் அப்போது எல்லாமே உடைந்த மனதை மறுபடியும் ஓட்டவைத்து பின்வரும் நாட்களில் எப்போதுமே நம்முடைய மனது உடையக்கூடாது என்ற காரணத்துக்காக பாதுகாப்பு கேடயத்துடன் நம்முடைய மனதை போர் வாள் முனையில் பாதுகாத்தது நாம்தான். நாம் நம்பிக்கை வைத்த எத்தனை பேர் நம்மை ஏமாற்றி இருக்கிறார்கள். எத்தனை முறை நமக்கு ஆதரவாக இருப்பவர்கள் நமக்கு எதிராக மாறியதோடு மட்டும் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையை சேர்த்து உடைத்தும் இருக்கிறார்கள். ஆனால் நாம் எப்போதுமே நமக்கு ஆதரவாக இருந்து இருக்கிறோம். நம்மை போல நம்மை பார்த்துக்கொள்ள வேறு யாரால் முடியும். நான் இங்கே தனிமையை பற்றி பேசவே இல்லை. நமக்கு நாமே ஒரு பேர்ஸனலாக சப்போர்ட் பண்ணிக்கொள்ளும் ஒரு மாயாஜாலமான விஷயத்தை பற்றிதான் நான் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறேன். எந்த ஒரு உயிரும் இன்னொரு உயிரின் ஆதரவை நம்பி உயிரோடு வாழ்வதை விரும்புவது இல்லை. நம்முடைய மனது ஒரு முட்டாளாக வேலை செய்யலாம் ஆனால் மூளை அப்படி வேலை செய்யாது. மூளை எப்போதும் தன்னால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு அதிகமாக நமக்கு சப்போர்ட் செய்கிறது. நாம் நல்லவர்களாகவும் இருக்கலாம் அல்லது கொடியவராகவும் இருக்கலாம். நாம் நல்லவராக இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் எல்லோரையும் காப்பாற்றிவிட முடியுமா ? அல்லது நாம் கெட்டவர்களாக இருந்தால் இந்த உலகத்தில் எல்லோரும் நம்மை மணனித்தா விடுவார்கள் ? அடிப்படையில் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்கள்தான் அனைத்து விஷயங்களுக்குமே காரணம், நீங்கள் கடைசியாக மனது உடைந்து மனச்சோர்வு அடைந்ததுக்கு காரணம் என்ன என்று யோசித்தால் கண்டிப்பாக ஒரு மனிதராகத்தான் இருப்பார்கள் , வெறும் உயிரற்ற பொருட்கள் உங்களை அதிகமாக பாதித்துவிடாது. இங்கே எல்லா வகை கெட்ட விஷயங்களுமே மனிதர்களால் மட்டுமே நடக்கிறது. நீங்கள் படும் எல்லா துன்பங்களுக்குமே மனிதர்கள்தான் காரணம் ! இருந்தாலுமே உங்களுக்கு ஒரு பிரச்சனை வரும்போது உங்களை நீங்கள் எப்படி சப்போர்ட் பண்ண கற்றுக்கொண்டு இருக்கின்றீர்கள் ? உங்களுக்கு வெளியே இருந்து யாருமே சப்போர்ட் செய்யவில்லையே ? உங்களுக்கு , உங்களுடைய செயலுக்கு இந்த பூமியே எதிராக உள்ளதே ? கடவுள் உங்களை எரிக்க வேண்டுமா புதைக்க வேண்டுமா என்று உங்களுடைய விதியை அவ்வளவு கடினமாக எழுதிக்கொண்டு இருக்கிறாரே ! இத்தனை பிரச்சனைகள் இருந்தும் உங்களை எல்லா விஷயங்களுமே பயமுறுத்தியும் எதனால் உங்களின் மேல் இருக்கும் சப்போர்ட்டை நீங்கள் விடவே இல்லை ? ஒரு விஷயத்தில் உங்களுக்கு நீங்கள் ஆதரவு கொடுத்தால் உலகம் உங்களை வெறுத்து ஒதுக்கி உங்களுக்கு துன்பத்தையும் துயரத்தையும் கொடுக்கும் ஆனால் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள். இந்த உலகத்தை பற்றி கவலைப்பட மாட்டீர்கள். ஆனால் அப்படியே நீங்கள் ஆதரவு கொடுக்காமல் உங்களுடைய விஷயங்களுக்கும் உங்களுடைய முடிவுகளுக்கும் நீங்கள் இதுவரை கொடுத்துக்கொண்ட தற்சார்பை நீங்கள் விட்டுவிட்டால் உங்களுடைய சுயமான கௌரவம் மற்றும் மதிப்பை இழந்து உங்களுடைய செயல்களுக்கு உங்கள் மனதில் இருந்து ஆதரவு கொடுப்பதை நிறுத்திவிட்டால் 'எனக்கு நான் சப்போர்ட் பண்ணுவேன் என்று சொல்லிக்கொண்டு இருந்த நீங்கள் ஒரே நாளில் உங்களுடைய சப்போர்ட்டை விட்டுவிட்டு உலகத்துக்கு ஆதரவாக கொடியை தூக்கினால் உங்களுடைய நான் என்ற அடையாளத்தை உலகத்துக்காக இழந்தால் உங்களை எல்லோருக்குமே பிடிக்க ஆரம்பிக்கிறது. இருந்தாலும் இப்போது புதிதாக பொய்யாக நடித்துக்கொண்டு இருக்கும் ஆள் நீங்கள் இல்லையே ? வேறு ஒருவராக வாழ்ந்து இந்த உலகத்தை சந்தோஷப்படுத்த உங்களை இழந்துவிடுகிறீர்கள்.  நாம் நமக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறோம். கடினமான சூழ்நிலையில் சுற்றி உள்ள எல்லோருமே வெறுக்கும்போது கூட நாம் நம்மை நேசித்துதான் இருக்கின்றோம். இந்த விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு புதிய பயணத்தை உருவாக்க வேண்டும். நம்முடைய காலடித்தடங்கள் ஒரு புதிய பாதையையே உருவாக்க வேண்டும். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...