Wednesday, January 10, 2024

CINEMA TALKS - GEN V - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 


THE BOYS வெப் தொடரை பார்த்தவர்களுக்கு மட்டும்தான் இந்த ஜேன்-வி தொடரை புரிந்துகொள்ள முடியும் , அதுவே  THE BOYS என்ற தொடரின் முதல் மூன்று சீசன்களை நீங்கள் பார்க்கவில்லை என்றால் உங்களுக்கு இந்த தொடர் உங்களுடைய வாழ்நாளில் நீங்கள் பார்த்த மிகவும் மோசமான இணைய தொடராக இருக்க கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது, அவ்வளவு சாகும்வரைக்கும் அடித்துக்கொள்ளும் காட்சிகள் இந்த தொடரில் இருக்கிறது. GEN V - என்பது ஒரு சூப்பர் ஹீரோக்களுக்கான ஒரு தனியார் யூனிவர்சிட்டியை மையமாக கொண்டு நடந்துகொண்டு இருக்கும் ஒரு கதை , வெளி உலகத்துக்கு மட்டும்தான் இந்த யூனிவர்சிட்டி கல்லூரி ஆனால் உள்ளுக்குள்ளே சூப்பர் பவர் இருப்பவர்களை வைத்து சிறையில் போட்டு கொடூரமான ஆராய்ச்சிகளை பண்ணத்தான் இப்படி ஒரு கட்டிடத்தை கட்டி வைத்து இருக்கிறார்கள் என்பதை ஒரு சில மாணவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கிறார்கள் , மாட்டிக்கொண்டவர்களை விடுவித்து காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் இந்த தொடரின் கதை.  எல்லோருமே கெட்டவர்கள் , இவர்களின் நியாயம் அநியாயம் என்ற வகையில்தான் THE BOYS கதை நடக்கும் இடங்கள் அமைந்து இருக்கும் என்பதால் அவ்வளவாக உங்களுக்கு இந்த தொடர் இம்ப்ரஸ் பண்ணவேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுடைய பெர்ஸனல் பிரஃப்ரன்ஸ்ஸில் THE BOYS போன்ற தொடர் இருக்கும் என்றால் இந்த தொடரை நீங்கள் பார்க்கலாம் !! மற்றபடி இந்த வலைப்பதிவில் இருக்கும் கருத்து பகிர்வு உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்றால் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு பேராதரவு கொடுத்து வெற்றியடைய செய்யுங்கள்.



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...