Friday, January 26, 2024

GENERAL TALKS - கான்ஸேப்ட்களில் கொஞ்சம் அட்வான்ஸ்ஸாக போகிறோமோ ?

 



ஒரு ஒரு முறையுமே நான் இந்த வலைப்பூவில் பதிவு பண்ணக்கூடிய விஷயங்களில் நான் திரும்ப திரும்ப சொல்லும் ஒரு கருத்து என்னவென்றால் நம்முடைய வாழ்க்கை ஒரு சோதனை எலியின் வாழ்க்கையை போல மாறிவிட்டது. நம்முடைய வாழ்க்கை அவ்வளவு கஷ்டமாக உள்ளது. தொழில செய்பவர்களை விடவும் தொழில் நுட்பங்களை விரைவாக கற்றுக்கொள்ளும் சாமர்த்தியம் நிறைந்தவர்களாக இருந்தால் மட்டும்தான் வரும் காலத்தினை தாக்குப்பிடிக்க முடியும் என்று தோன்றுகிறது. சாதாரணமான வியாபார முறைகள் கூட இப்போது எல்லாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் நிறைந்த துறைகளாக மாறியிருக்கிறது. முட்களால் ஆன கைக்கடியாரம் கூட பழைய பேஷன் என்று மாறிவிட்ட காரணத்தால் சுமாராக 10000 வரை செலவு செய்து சார்ஜ் போட்டுக்கொள்ளும் மின்சார கைக்கடிகாரம் வாங்கும் காலகட்டம் வந்துவிட்டது. பாட்டு கேட்கும் கருவிகள் வெளிப்புற சப்தங்களை குறைக்கும் நாயிஸ் கேன்ஸலேஷன் என்ற அட்வான்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றன. நம்ம வாழ்க்கையின் ஒரு சின்ன விஷயம் கூட அதனுடைய அட்வான்ஸ் ஃபார்மட்டில் இருப்பதை இந்த வருடங்களில் என்னால் பார்க்க முடிகிறது. இந்த காலத்தில் நடக்கும் பொருட்களுக்கான போட்டியில் உயிரையும் உடமைகளையும் பார்த்துக்கொள்ள எவ்வளவு போராட்டங்கள் இருக்கிறது. ஒரு சில நேரங்களில் விதி என்பது கடவுளுடைய கட்டுப்பட்டுக்குள் கூட அடங்காத ஒரு விஷயமாக இருக்கிறது என்ற கருத்து உண்மையா என்றே தோன்றுகிறது. விதியின் வலிமை அதிகம் என்பதால் யாராலுமே எதுவுமே பண்ண முடிவதே இல்லை. நம்முடைய கடந்த காலமும் நிகழ்காலமும் எதிர்காலமும் கடவுளுடைய கட்டுப்பட்டுக்குள்ளே இல்லாத விஷயங்களாக கர்மாவின் கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கும் விஷயங்களாக மட்டுமே இருக்கிறது என்பதுதான் உண்மையா ? கர்மா மிகவுமே சக்திவாய்ந்த விஷயமா ? இது எல்லாம் இன்னொரு வகையான டிஸ்க்கஷன் , ஃபேண்டஸி கான்ஸேப்ட்கள் எப்போதுமே ரேயாலிட்டி கான்ஸேப்டுகளை விட மாறுபட்டதுதான். இருந்தாலுமே வளர்ந்து வரும் தொழில் நுட்பம் நிறைய ஆபத்தான நுணுக்கங்களையுமே மக்களுக்கு உருவாக்க காரணத்தை கொடுத்துக்கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டர்களுடைய ஃபோன்களுடைய பயன்பாடுகளை நம்பியே வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கும்போது நம்ம வாழ்க்கையை உயிர் இல்லாத இதுபோன்ற மெஷின்களிடம் ஒப்படைக்கிறோம். இந்த மெஷின்கள் யாருடைய கட்டுப்பாட்டுக்கு மேலேயும் வேலை செய்யக்கூடிய சாதனங்கள். ஒரு கொடிய மனிதனின் கட்டுப்பாட்டுக்குள் நம்முடைய கம்ப்யூட்டர் மற்றும் போன் சென்றுவிட்டால் நம்முடைய தனிப்பட்ட பாதுகாக்க வேண்டிய தகவல்கள் வெளியே வந்து நம்முடைய வாழ்க்கையே உடைந்துவிடும் என்பதையும் வங்கியின் கணக்கு காலியாக மாறிவிடும் அபாயமும் உள்ளது என்பதை நினைவில் கொள்க ! டெக்னோ சமாச்சாரங்கள் எப்படிப்பட்ட விஷயங்களாக இருந்தாலும் நம்முடைய கடினமான கட்டுப்பாட்டு வட்டத்துக்குள்ளே வேலை பார்க்கும் விஷயங்களாக மட்டும் இருக்க வேண்டும். இவைகள் இயந்திரங்கள்தான் என்பதால் எதிர்காலத்தில் மரம் , செடி , கொடிகள் , இயற்கை வளம் , மற்றும் நில வாழ் கடல் வாழ் உயிரினங்களுடைய பாதுகாப்பு இன்னுமே முக்கியமானதாக கருத வேண்டும் என்பதை இந்த டெக்னோ உலகத்திலும் மறக்காமல் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். நிறைய துன்பங்களை அனுபவித்து வலியை அனுபவித்த பின்னால் நேருக்கு நேராக இந்த துன்பங்களுக்கு எல்லாமே காரணமாக இருக்கும் மனிதர்களை எதிர்த்து சண்டை போட செல்கிறோம். நமக்கு கட்டாயப்படுத்தி ஒரு கஷ்டத்தை கொடுக்கும்போது நாம் அனுபவிக்கும் வலிகளை இன்னொருவர் அனுபவிக்க கூடாது என்றால் நமக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டும்தான் மேஜராக உள்ளது. முதல் வாய்ப்பு வலிகளில் இருந்து வெளியே வரும் நுட்பமான செயல்களை கற்றுக்கொடுக்க வேண்டும், இல்லை என்றால் வலியை கொடுப்பது யாராக இருந்தாலும் எவராக இருந்தாலும் அடித்து நொறுக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...