Tuesday, January 30, 2024

GENERAL TALKS - ஒரு சிறப்பான ஆன்ட்ராய்ட் கேம் !

 



இந்த வலைப்பூவை அப்ரிஷியேஷன் பண்ணுபவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும் , சமீப காலமாக ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் என்ற ஸ்மார்ட் ஃபோன் விளையாட்டு ஒரு பிசினஸ் மாடல் என்ற வகையில் நன்றாக என்னை கவர்ந்து இருக்கிறது. கண்டிப்பாக இன் ஆப் பெர்ச்செஸ்ஸில் அதிக தொகைக்கு பேக்கேஜ்களை விற்கின்றார்கள் என்பது குறைதான் இருந்தாலும் உலகம் முழுவதும் விளையாடும் விளையாட்டு என்பதால் நன்றாக ஆப்டிமைஸ் பண்ணி இருக்கிறார்கள். டேவலப்பர்களை கொண்டு குறைகள் இருந்தால் எளிதில் சரிபண்ணி விடுகிறார்கள். விளையாட்டு குறைவான கிராப்பிக்ஸ் செட்டிங்ஸ் வைக்கும் பட்சத்தில் நன்றாக விளையாட முடிகிறது. ஆனால் 1.1 GB க்கும் குறைவான ஃபைல் சைஸ் என்றாலும் விளையாட்டு முடிந்த வரையில் நன்றாகவே வண்ணமயமாக புது புது விஷயங்களுடன் வந்துகொண்டு இருக்கிறது. மாதம் மாதம் நிறைய அப்டேட்களை கொடுத்து  இந்த கணினி விளையாட்டு மிகவும் சுவாரசியமாக இருக்கும் அளவுக்கு அமைத்து இருக்கின்றார்கள். நம்ம வாழ்க்கையில் நிறைய பேருடன் பேசும் பழகும் இன்ட்ராக்ஷன்கள் குறைந்துவிட்டது என்றால் ரேலாக்ஷேஷனுக்கு ஒரு கேம் வேண்டும் என்றால் இந்த விளையாட்டு ஒரு நல்ல படைப்பு. நம்ம ஊரிலும் இதுபோன்று ஒரு வீடியோ கேம் உருவாக்கினால் கண்டிப்பாக நன்றாக இருக்கும். ஆன்லைன் விளையாட்டு என்பதால் இந்த விளையாட்டில் நிஜமாகவே நிறைய பேருடன் விளையாடுகிறோம் என்பதால் வாய்ஸ் சாட்டிங் வசதிகளை குறைத்துக்கொள்வது நல்லது. மற்றபடி ஒரு தரமான விளையாட்டுக்கான எல்லா விஷயங்களும் இந்த விளையாட்டில் இருக்கிறது. ஒரு இண்டரெஸ்ட்டிங் ஆன வீடியோ கேம் சில வாரங்களுக்கு விளையாட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த விளையாட்டு நல்ல சாய்ஸ் என்று இருக்கலாம். பொதுவாக நான் விளையாட்டுக்களை அதிகமாக ரேக்கமேன்டேஷன் பண்ணுவது இல்லை. இதுவுமே நான் மிக மிக அதிகமாக வருத்ததில் இருந்தபோது விளையாட ஆரம்பித்த ஒரு ரேலாக்ஸேஷன் விஷயமாக எனக்கு பிடித்து இருந்த காரணத்தாலும் ஒரு கம்பெரிஸனுக்கு ஜி.டி.ஏ. அல்லது கால் ஆஃப் டியூட்டி போன்ற விளையாட்டுக்களை போல காட்சிகளின் அமைப்பு பிரமாதமாக இருக்கிறது என்பதாலும் நான் இந்த விளையாட்டை பற்றி ஒரு பதிவை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். குழந்தைகள் விளையாடும் பட்சத்தில் கிரேடிட் கார்டு அல்லது வங்கிக்கணக்கு மூலமாக அதிகமாக பணம் செலவு பண்ண வாய்ப்புகள் உள்ளது என்பதால் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஃபோன்களில் இந்த விளையாட்டை விளையாடுவதை தவிர்க்கவும். இது நான் ஒரு பொதுவான அட்வைஸ் என்று சொல்கிறேன். பிளே ஸ்டோர் மூலமாக டிஜிட்டல் விஷயங்களாக ஆப்ஸ் , காணொளிகள் , சினிமா , கணினி விளையாட்டு பெர்ச்செஸ்கள் என்பது போன்ற விஷயங்களுக்கு தேவைப்பட்டால் பிளே ஸ்டோர் பேலன்ஸ் பணத்தை ரீ-சார்ஜ் செய்து அந்த பணத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். நேரடியாக வங்கி கணக்கு அல்லது யூபிஐ ஆப்ஸ்களை இவைகளில் இணைப்பதை கண்டிப்பாக தவிர்க்கவும். டிஜிட்டல் வாங்கல் விற்றல் எப்போதுமே நிஜ வாழ்க்கை பொருட்களைப்போல உத்திரவாதங்கள் கொடுக்க முடியாத விஷயங்கள். மொத்தத்தில் ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் என்ற இந்த ஆன்ட்ராய்ட் விளையாட்டு நான் விளையாடிய கொஞ்சம் வாரங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. இந்த விளையாட்டை போல நம்ம ஊரு ஆடியன்ஸ்க்கு பிடித்ததாக ஒரு விளையாட்டு உருவாக்கலாம் என்ற ப்ராஜேக்ட் ஐடியா கிடைத்து உள்ளது. கண்டிப்பாக பாருங்கள் ஒரு நாளில் நிறைய அட்வென்சர் நிறைந்த ஒரு நல்ல கணினி விளையாட்டை நான் பப்ளிஷ் பண்ணுவேன். இந்த வலைப்பூவை விஸிட் அடித்தமைக்கு நன்றிகள். மறக்காமல் எல்லா போஸ்ட்களையும் படிக்கவும். இந்த மொத்த வலைப்பூவும் ஒரே ஒரு மனிதனால் எழுதப்படுகிறது என்பதால் கண்டிப்பாக குறைகளை மன்னிக்கவும். 




































No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...