Friday, January 12, 2024

TAMIL TALKS - EP.12 - என்னாது ? வீடியோ கேம்களின் விற்பனை குறைந்துகொண்டு இருக்கா ?


 கம்ப்யூட்டர் கேம்ஸ் கடந்த காலமாக மாறிக்கொண்டு இருக்கிறதா ? பொழுதுபோக்கு என்ற வகையில் கணினி விளையாட்டுக்கள் தவிர்க்க முடியாத காலமாக மாறிக்கொண்டு இருக்கிறது ஆனால் இப்போது கணினி விளையாட்டுக்கள் 2014 வரைக்கும்தான் உலக அளவில் ட்ரேன்டிங் விஷயமாக இருந்தது. 4G அறிமுகம் கணினி விளையாட்டுக்களின் பிரியர்களை ஆண்ட்ராய்டு பக்கமாக கொண்டுவந்தது. இதுக்கு மிகவும் பலமாக இருந்த காரணம் ஆண்ட்ராய்டு ஒரு திறந்த நிலை இயங்குதளம் என்று இருப்பதால் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு தேவையான விளையாட்டுக்களை மற்றும் பயன்பாடுகளை தனிப்பட்ட முறையில் எவர் வேண்டுமென்றாலும் தயாரிக்கலாம் என்ற ஒரு சிறப்பான அம்ஸம்தான். பிளே ஸ்டோர் உலகம் முழுக்க பெரிய வெற்றியை அடைந்த காரணமும் அதுதான் ஆனால் இன்றைய சூடான செய்தி என்னவென்றால் கணினி விளையாட்டுக்கு தேவையான கிராபிக்ஸ் கார்டுகள் எல்லாம் கிரிப்டோ எடுக்கிறேன் என்று பணக்காரர்களால் மானாவாரியாக வாங்கப்பட்டதால் அப்போது கேம் விளையாட முடியாத அளவுக்கு கிராப்பிக்ஸ் கார்டுகள் விலை தெறிக்க விட்டுள்ளது. இப்படியான அநியாய விலையாக பகல் கொள்ளை சம்பவம் வீடியோ கேம் விளையாடுபவர்கள் வாழ்க்கையில் நன்றாகவே விளையாடிவிட்டது. இப்போது தயாரிப்பே நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிதாக விளையாடுபவர்களாலும் இலாபம் இல்லாமல் இருக்கிறது. புதிதாக யாருமே கணினி விளையாட்டுக்களை வாங்கவில்லை ஆண்ட்ராய்டு ஃபோன்களில் மட்டுமே நன்றாக விளையாட்டுக்களை விளையாட பழக்கிவிட்டார்கள்.  இதுவுமே இல்லாமல் உலகம் முழுக்க கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் விற்பனையும் குறைந்துவிட்டது. சன்னல்கள் ஆப்பெரேட்டிங் சிஸ்டமை இலவசமாக கொடுத்துமே வீடியோ கேம்களை பைரஸி'பண்ணுபவர்கள் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

No comments:

Post a Comment

CINEMA TALKS - MISSION IMPOSSIBLE GHOST PROTOCOL - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

சொந்த நாட்டின் பாதுகாப்புக்காக வெளிநாட்டில் தங்களுடைய உயிரை பணயம் வைத்து மிஷன்னை முடிக்க வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் கதாநாயகன் ஈதன் மற...