Tuesday, January 23, 2024

GENERAL TALKS - எப்போதுமே செய்யும் வேலைகளை பணமாக மாற்றிவிடுங்கள் !!



இப்போதைக்கு நீங்கள் செய்யக்கூடிய வேலையை எப்படி பணமாக மாற்றுவது என்று ஒரு வியாபார மாடல் செய்வதில் மட்டும் ஃபோகஸ் பண்ணுங்கள். இந்த உலகத்தில் இது தெரியாமல்தான் நிறைய பேர் அவர்களுடைய வாழ்க்கையின் நிறைய வருடங்களை இழந்து நின்றுகொண்டு இருக்கின்றார்கள். நம்முடைய வாழ்க்கை வேகமாக செல்லக்கூடிய ஒரு அம்பு போன்றது, ஒரு டிகிரி கூட சோதப்ப கூடாது. பின்னாட்களில் மிகவும் மோசமான அளவுக்கு நாம் எதிர்பார்த்த வாழ்க்கைக்கு வெகுதூரத்தில் இருப்போம். நாம் என்னதான் நம்முடைய உடல் , பொருள் , கோஸ்ட் என்று எல்லாமே ஒரு வேலைக்காக கொடுத்தாலும் இந்த உலகம் என்னவோ நாம் செய்யும் வேலையை விட 200 மடங்கு அதிகமான வேலையை மட்டுமே நம்மிடம் எதிர்பார்க்கும், நாம் என்ன கிரிப்ட்டானில் இருந்து விண்வெளிக்கப்பலில் வந்த வேற்றுகிரக ஹீரோவா ? இல்லையென்றால் ஆராய்ச்சியில் இருக்கும் சிலந்தி பூச்சி நம்மை கடித்து நமக்கு அசுர பலம் கிடைத்துவிடுமா ? இது எல்லாம் படத்தில்தான் நடக்கும் நிஜத்தில் கண்டிப்பாக நடக்காது . இந்த உலகத்தில் உண்மையாக ஒரு மாயாஜாலத்தை நிகழ்த்தவும் உங்களுடைய சக்தியை அதிகப்படுத்தவும் பணத்தால் மட்டும்தான் முடியும். வேறு எந்த வகையில் நீங்கள் முயற்சி செய்தாலும் கடவுள் உங்களை தடுத்துவிடுவார். உங்களுடைய நம்பிக்கை கப்பலை நடுக்கடலில் கவிழ்த்துவிடுவார். இதுதான் நடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழந்து உடல் மற்றும் மனதின் வலியை தாங்க முடியாமல் நாம் வாழ்க்கையை முடித்துக்கொள்வதுதான் கடவுளின் ஆசை என்றால் கண்டிப்பாக அந்த ஆசை நிறைவேற கூடாது. நம்முடைய கனவு வாழ்க்கைக்காக நாம் அதிகமாக கஷ்டப்பட வேண்டும். கண்டிப்பாக இப்படிப்பட்ட கடினமான சோதனைகளை வெல்ல வேண்டும் என்றால் பணம் கணக்கு இல்லாமல் நம்மிடம் கொட்டி கிடைக்கத்தான் வேண்டும். இது என்னுடைய பேராசை என்று சொல்ல வேண்டாம். இந்த உலகத்தின் கொடூரத்தன்மையில் இருந்து ஒரு மனிதனை காப்பாற்ற பணம் மிக மிக அதிகமான அளவில் தேவைப்படுகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது. இதனால்தான் சொல்கிறேன். எப்போதுமே நீங்கள் செய்யும் வேலைகளை பணமாக மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த ஒரு குறிப்பிட்ட செயல்பாடு கண்டிப்பாக மிகவும் சிறந்த நல்ல பலன்களை கொடுக்கும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...