Thursday, January 25, 2024

GENERAL TALKS - கஷ்டங்களை சமாளிப்பதே ஒரு கஷ்டம்தான் !!

 




 ஒரு விஷயத்தில் வெற்றி அடைந்தால் மட்டும்தான் உயிரோடு இருக்க முடியும் என்றால் உங்க வாழ்க்கையில் உங்களை கட்டுப்படுத்தி வைத்து இருக்கும் எல்லா சக்திகளிடம் இருந்தும் விடுப்பு அடைந்து உங்களுடைய உயிரை காப்பாற்ற போராடவேண்டிய கட்டாயம் இருக்கிறது. உயிரே போனதுக்கு பின்னால் பணம் இருந்து என்ன பலன் ? பொருட்கள் இருந்துதான் என்ன பலன் ? நம்மை பயமுறுத்தி நம்முடைய மனதுக்கு உள்ளே நம்மைப்பற்றிய ஒரு மட்டமான மனநிலையை விதைப்பதும் நம்முடைய முகத்தின் மேல் நேருக்கு நேராக ஒரு குத்து விடுவதுமே ஒன்றுதான். இன்னும் சொல்லப்போனால் குத்துவாங்கிய காயம் கூட கொஞ்சமாகத்தான் பாதிப்பு கொடுக்கும். மட்டமான மனநிலையை உருவாக்கி நாம் தோல்விகளை மட்டும் அடைய பிறந்தவர்கள் என்றும் வெற்றியை அடைய தகுதியே இல்லாதவர்கள் என்றுமே நம்முடைய மனதுக்குள் நம்மை பற்றிய தப்பான அபிப்ராயத்தை விதைத்துவிட்டால் நம்முடைய வாழ்க்கையே நாசமாக போய்விடும். வாழ்க்கை என்ற போரில் குறிப்பிட்ட சில கட்டங்களில் பின்வாங்க கூடாது , சமாதானம் பேச கூடாது , அடிவாங்கிவிட்டு நிற்கவும் கூடாது , வேண்டுமென்றே வெளியேறவும் கூடாது. நம்முடைய வாழ்க்கையில் அப்படிப்பட்ட கட்டத்தில் வேண்டுமென்றே எதிர்ப்பவர்களை நேருக்கு நேராக மோதி வெற்றியடைந்தால்தான் நம்மைப்போல இன்னொருவரின் வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்காமல் சென்றுக்கொண்டு இருப்பார். இன்னொருவருடைய வாழ்க்கையை நம்மை எதிர்க்கும் இந்த மனிதர் பாதிக்க கூடாது என்று நினைத்தாலும் வாழ்க்கையில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரை பாதிப்பது என்பது எப்போதுமே தப்பான விஷயம் என்ற காரணத்தாலும் வேண்டுமென்றே எதிர்ப்பவர்களை எவ்வளவு வலிமையாக இருந்தாலும் தோற்கடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான பாடம். நாம் எப்போதுமே வாழ்க்கையை அதிக நாட்கள் வாழப்போவது இல்லை. மிக மிக அதிகபட்சமாக போனாலும் இளமைக்காலம் என்பது 15 - 30  ஆண்டுகள் மட்டுமே நமக்கான சப்போர்ட்டை கொடுக்கிறது.  இந்த காலத்துக்குள்ளேதான் எவ்வளவு சாதிக்க முடியுமோ அவ்வளவு சாதித்துக்கொள்ள வேண்டும். காலங்கள் மாறிவிட்டால் உடல் சோர்வும் , மன சோர்வும் , பொருளாதார நெருக்கடியும் , பயமும் என்று நிறைய காரணங்கள் நம்முடைய வெற்றிகளை நிகர பூச்சியமாக மாற்றிவிடும். கண்டிப்பாக நம்புங்கள். காலத்தை நம்முடைய உள்ளங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தால் மட்டும்தான் வெற்றிகளை எடுத்து நம்முடைய உள்ளங்கைக்குள் வைத்துக்கொள்ள முடியும். நம்ம வாழ்க்கையில் தோல்வியை அடைதுவிட்டால் நம்முடைய வாழ்க்கையில் நம் மேலே நமக்கு இருக்கும் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் மிகவும் சாதாரணமாக உடைத்துவிடுவார்கள். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...