Monday, January 22, 2024

TAMIL TALKS EP. 21 - இதுவே ஒரு சாதனைதான் !!

 



இதுவரைக்கும் நம்முடைய கடந்த காலத்தை மொத்தமாக எடுத்து பார்க்கும்போது இந்த உலகத்துக்காக நாம் எவ்வளவோ கொடுத்து இருக்கிறோம். இந்த உலகம் சொன்ன பேச்சை எல்லாம் கேட்டு இருக்கிறோம். இந்த உலகம் சொன்ன பொது வேலைகளை எல்லாம் செய்து இருக்கிறோம். சமூகத்தில் நம்முடைய பயனை நிரூபித்து காட்டும் வகையில் நம்முடைய கான்ட்ரிப்யூஷனை கொடுத்து கெத்து காட்டி இருக்கிறோம். இருந்தாலும் நாம் கொடுத்த விஷயங்களுக்கு தகுந்த சம்பளங்கள் நமக்கு கிடைக்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  நம்மால எவ்வளவு கஷ்டத்தைதான் தாங்க முடியும் ? கஷ்டம் மேல் கஷ்டம் உலகம் கொடுத்துக்கொண்டே இருந்தால் என்ன செய்வது ? வாழ்நாள் முழுவதும் கஷ்டங்களே நிரந்தரமாக இருந்தால் என்ன செய்வது ? இதுவரைக்கும் நடந்த சம்பவங்களை எல்லாம் பார்த்தால் நாமும் எவ்வளவுதான் இந்த உலகத்துக்காக நன்மைகளை செய்து போராடுகிறோம், பதிலுக்கு நமக்கு என்னதான் கிடைக்கிறது ? வெறுப்பும் ஏமாற்றமும்தான் கிடைக்கிறது. ஒரு சில விஷயங்களை நாம் சாவதற்குள் எப்படியாவது முடித்துவிடலாம் என்று பார்க்கிறோம் ஆனால் நீங்கள் இறந்தாலுமே பரவாயில்லை உங்களை இந்த வகையில் வெற்றியடைய நான் விடமாட்டேன் என்றுதான் தலைவர் எல்லா வேலைகளையும் பண்ணுகிறார். நாம் எந்த அளவக்கு சீரியஸ்ஸாக உயிரை கொடுத்து போராடுகிறோம் என்று நிறைய பேரால் புரிந்துகொள்ள முடிவதே இல்லை. நம்முடைய கடின உழைப்பை ஜோக் என்று கருதி உழைப்புக்கான வெகுமதி கொடுக்காமலே சென்றுவிடுகிறார்கள். சலிப்பும் சோர்வும் நம்முடைய மனதுக்குள் இருக்கும்போது போராடுவது கடினமான விஷயம். உடல் சலிப்பும் மனச்சோர்வும் இருக்கும்போது நாம் ஆசைப்படுவது எல்லாமே நிம்மதியான தூக்கம் மட்டும்தான்.  நெருக்கமானவர்கள் நம்மோடு இருந்து காயங்களுக்கு மருந்து போடும்போது நம்முடைய வலிகள் குறைகிறது என்று நினைக்கிறோம். மனதுக்குள் சோர்வு மட்டுமே இருந்தாலும் கூட சந்தோஷம் நம்மோடு நெருக்கமான மனிதர்கள் இருந்தால் கிடைத்துவிடுகிறது என்று நினைக்கிறோம். எல்லோருக்குமே அப்படி நெருக்கமான மனிதர்கள் கிடைப்பது இல்லை. பணம் நிறைய இருப்பவர்களால் அவர்களுடைய வாழ்நாளில் கிடைக்கும் நெருக்கமான மனிதர்களை அவர்களோடு பயணிக்க வைக்க முடியும். ஆனால் பணம் இல்லை என்றால் இப்படிப்பட்ட நெருக்கமான மனிதர்களும் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள். இங்கே என்னதான் இருந்தாலும் மனித வாழ்க்கையில் இருக்கும் ஒரு உயிரை காப்பாற்றிக்கொண்டு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருப்பதே ஒரு சாதனைதான். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...