Friday, January 26, 2024

GENERAL TALKS - கடினமாக யோசிக்க வேண்டும் !

 


கடினமான முடிவுகளை எடுக்க தயங்க கூடாது. நாம் என்னதான் கஷ்டப்பட்டாலும் மரணம் ஒரு கட்டத்தில் நம்முடைய வாழ்க்கையை எடுத்துக்கொள்ளத்தான் போகிறது. நம்முடைய வாழ்க்கை இந்த அளவுக்கு உடையக்கூடிய தன்மையாக இருக்கும்போது நாம் எடுக்கும் சுலபமான முடிவுகள் நமக்கான பெரஸனல் முன்னேற்றத்தை கொடுத்துவிடாது. எப்போதுமே நாம் எடுக்கும் கடினமான முடிவுகள்தான் நம்முடைய உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுத்து நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்துகிறது. சாதாரண ரேங்க்கில் இருந்து சிறப்பான ரேங்க்குக்கு எல்லா மனிதனும் ஒரு கட்டத்தில் சென்றுக்கொண்டே இருக்க வேண்டும். நம்ம தகுதி இதுதான் என்றும் சாகும் வரைக்குமே நாம் இப்படித்தான் இருக்க போகிறோம் என்றும் மட்டமான முடிவுகளை எடுக்க வேண்டாம். நம்ம வாழ்க்கை என்பது ஒரு போட்டி அல்ல அது ஒரு பயணம் என்று கருத்து சொல்பவர்கள் எல்லாம் வங்கிக்கணக்கில் நிறைய பணம் வைத்து இருப்பவர்கள் என்பதால் அவர்களுடைய வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாக ஒரு பயணத்தை போல வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் ஆனால் வங்கி கணக்கில் குறைவாக பணம் வைத்து இருந்தால் நாம் ஆசைப்படும் எந்த விஷயமும் கண்டிப்பாக கிடைக்காது என்ற கவலையில் வாழ்க்கையே போட்டியாகவும் இன்னும் சொல்லப்போனால் போராட்டமாகவும் மட்டும்தான் இருக்கும். இதனால் எப்போதுமே பரிந்துரை பண்ணக்கூடிய ஒரு விஷயம் என்றால் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டும் நம்முடைய தனிப்பட்ட விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். வெற்றி என்பது நிறைய சின்ன செயல்களை அடுத்தடுத்து திட்டம் போட்டு செய்தால் கிடைத்துவிடும் ஆனால் ஒரு பெரிய செயலை செய்தால் கிடைக்கும் என்று நம்பி நாமும் உயிரை கொடுத்து அந்த பெரிய செயலை எப்படியாவது செய்து முடித்து வெற்றியை கண்ணால் பார்த்து விடுவோமா என்று எவ்வளவோ கஷ்டப்படுவோம். விஷயம் இங்கேதான் இருக்கிறது. பாரம் என்பது மேட்டர் அல்ல. அந்த பாரத்தை நகர்த்தும் கருவிதான் மேட்டர். காலம் நம்முடைய நிகர வெற்றிகளை பூச்சியமாக மாற்றலாம் நம்முடைய நிகர தோல்விகளை இன்பினிட்டியாக மாற்றலாம் எனவே வயதுக்கு தகுந்த புத்திசாலித்தனத்தோடு பிரச்சனைகளை அணுகுவது நம்முடைய கைகளில் மட்டும்தான் உள்ளது. நம்முடைய வாழ்க்கை நமக்கு சிறப்பான கஷ்டங்களை கொடுத்து இருப்பதால் நாமும் வாழ்க்கைக்கு தரமான சம்பவங்களை கொடுக்க கடமைப்பட்டு உள்ளோம். ஒரு நாளுக்குள் என்ன என்ன சம்பவங்கள் நடக்கிறதோ அனைத்தையுமே பதிவு பண்ண நாட்குறிப்பு உருவாக்க என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையுமே நானும் பண்ணிக்கொண்டுதான் இருக்கிறேன். அடுத்து அடுத்து என்னதான் நடக்கிறது என்று பார்க்கலாம். நம்முடைய உடல்நலத்துக்காக இன்ஸ்யூரன்ஸ் எடுத்துக்கொள்வது எப்போதுமே ஒரு நல்ல ஆப்ஷன்தான். உங்களிடம் அதிகமாக பணம் இருக்கிறது என்னும் பட்சத்தில் உடல்நலத்தை பாதுகாக்க உங்களால் முடிந்த எல்லா விஷயங்களையும் நீங்கள் பண்ணிக்கொள்ளலாம் இருந்தாலும் வயது ஆகும் நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்கு இதுபோன்று ஹெல்த் இன்சூரன்ஸ் மிகவுமே உதவியாக இருக்கும். 

No comments:

Post a Comment

MUSIC TALKS - MALAI KOVIL VAASALIL KAARTHIGAI DEEPAM MINNUTHEY ! VILAKETHUM VELAIYIL ANANDHA RAAGAM SOLLUTHEY ! - TAMIL SONG LYRICS !

  மலை கோவில் வாசலில்  கார்த்திகை தீபம் மின்னுதே  விளக்கேற்றும் வேளையில் ஆனந்த கானம் சொல்லுதே முத்து முத்து சுடரே சுடரே  கொடு வேண்டிடும் வரங்...