Wednesday, January 31, 2024

MUSIC TALKS - MINNALGAL KOOTHADUM MAZHAIKAALAM - VERA LEVEL PAATU !

மின்னல்கள் கூத்தாடும் மழைக் காலம் 
வீதியில் எங்கெங்கும் குடைக் கோலம் 
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம் 
என் விழி எங்கும் பூக்காலம் !
 
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி 
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி 
 
.. 
 
முதல் முறை என் விரல் பூக்கள் பறித்தது தோட்டத்திலே 
தலையணை உறையில் ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கத்திலே 
காலை தேனீர் குழம்பாய் மிதந்தது சோற்றுக்குள்ளே 
கிறுக்கன் என்றொரு பெயரும் கிடைத்தது வீட்டுக்குள்ளே 
 
காதலி ஒரு வகை ஞாபக மறதி கண்முன்னே நடப்பது மறந்திடுமே 
வெளவாலைப் போல் நாமும் உலகம் மாறி தலை கீழாக தொங்கிடுமே 
 
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி 
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி
 
என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன் பதட்டத்திலே 
பக்கத்து வீட்டில் கோலம் போட்டேன் குழப்பத்திலே 
காதல் கவிதை வாங்கிப் படித்தேன் கிறக்கத்திலே 
ஓ.. குட்டி பூனைக்கு முத்தம் கொடுத்தேன் மயக்கத்திலே 
 
.. 
.. 
 
காதலும் ஒரு வகை போதை தானே உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல 
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால் புன்னகை செய்து கொஞ்சும் 
தாய் போல !
 
உடல் கொதித்ததே உயிர் மிதந்ததே ஹையோ அது எனக்கு பிடித்ததடி 
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே ஹையோ பைத்தியமே பிடித்ததடி 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...