Wednesday, January 31, 2024

MUSIC TALKS - KANAVELLAM NEETHANE UYIRE UNAKKE UYIRANAN - VERA LEVEL PAATU !

கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 
 
பார்வை உன்னை அழைக்கிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே 
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே 
 
சாரல் மழை துளியில் உன் ரகசியத்தை வெளி பார்த்தேன் 
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனி பூவாய் நீ குறுக 
என்னை அறியாமல் மனம் பறித்தாய் உன்னை மறவேனடி 
நிஜம் புரியாத  நிலை அடைந்தேன் இது எது வரை சொல்லடி 
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் 
 
கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 
 
தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி 
கானலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழி திறந்தேன் 
இணை பிரியாத நிலை பெறவே நெஞ்சில் யாகமே 
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன் 
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம் 
 
கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 
 
பார்வை உன்னை அழைக்கிறதே உள்ளம் உன்னை அணைக்கிறதே 
அந்த நேரம் வரும் பொழுது என்னை வதைக்கின்றதே 

கனவெல்லாம்  நீ தானே விழியே உனக்கே உயிரானேன் 
நினைவெல்லாம்  நீ தானே கலையாத யுகம் சுகம் தானே 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...