இலையுதிர் காலத்தில் காலியாக இலைகள் இல்லாமல் இருக்கும் ஒரு மரம் வசந்த காலத்தில் இலைகளாலும் பூக்களாலும் நிறைந்து காணப்படுவது போல வியாபாரத்திலும் நம்முடைய வெற்றிகளை அல்லது தோல்விகளை சரியான நேரத்தில் சரியான இடத்தில்தான் காட்ட வேண்டும். ஒரு சில பேருக்கு நம்முடைய வெற்றியை பார்த்து பொறாமை இருக்கும் இன்னொரு சில பேருக்கு நம்முடைய தோல்வியை பார்த்து இளக்காரம் இருக்கும் இந்த இரண்டு வகையான ஆபத்துகளும் இருப்பதுதான் வியாபாரம். வியாபாரம் பணத்தை சார்ந்தது, இங்கே ஒரு ஒரு 100 ரூபாய் நோட்டையும் கவனமாக செலவு பண்ணனும். இருந்தாலும் தோல்விகளும் நஷ்டங்களும் வந்துகொண்டேதான் இருக்கும். வணிகத்தை தேர்ந்தெடுத்தால் தொழில் முறையில் சம்பாதிக்கும் போட்டி இருக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம் ஆனால் உண்மையில் பொருட்களை விற்கவும் வாங்கவும் என்று இந்த வணிக வேலைகளை செய்யும்போது வாழ்க்கை போர்க்களமாக மட்டுமே இருக்கும். நேரம் போகும் ஆனால் இலாபம் கிடைக்காது. உங்களுடைய நம்பிக்கை உள்ளவர்களை கூட உங்களை ஏமாற்றத்தான் செய்வார்கள். உங்களுடைய தோல்விகளை சுட்டி காட்டி உங்களை அவமானப்படுத்துவார்கள் ஆனால் நீங்கள்தான் டேடிகேஷனை உங்களுடைய மனதுக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடவுளே நேரில் வந்து இறங்கி வியாபாரம் பண்ணினாலும் பொருட்களை விற்று இலாபம் சம்பாதிக்க முடியாது. இந்த வகை போட்டிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்டமாற்று முறை என்று ஒரு வகை வணிகம் நடந்துகொண்டு இருந்தபோதே இருக்கிறது என்பதால் உங்களுடைய வாழ்க்கை உங்களுடைய நுணுக்கமான மூளை நிறைந்த அடுத்த கட்ட முடிவுகளை பொறுத்து மட்டும்தான் இருக்கிறது. நேரம் போகிறது பொருட்கள் போகிறது என்று எதுவுமே மனதில் போட்டுக்கொள்ளாமல் நுணுக்கங்களை மட்டுமே கற்றுக்கொள்ளுங்கள். இங்கே வியாபாரம் அனுபவம் சார்ந்த அறிவை மட்டுமே அதிகமாக விரும்புகிறது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - டெர்மினேட்டர் படங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் !
டெர்மினேட்டர் திரைப்படத் தொடர் வாழந்ததையும் வீழந்ததையும் பேசியே ஆகவேண்டும் மக்களே, புதுமையான கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தால் ...
-
இந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால், இந்தப் படத்தின் காட்சியமைப்பு, இசை மற்றும் தயாரிப்புப் பணிகள் வேறு லெவல்லி...
-
நான் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது இரண்டு தனித்தனி காணொளிகளைப் பார்த்தேன். ஒரு தனி காணொளியில், ஒரு தொழிலதிபர், உங்கள் பணத்தை சரியாக நிர...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக