Thursday, January 25, 2024

TAMIL TALKS EP. 29 - தொழில் நுட்பம் நல்ல விஷயமா ?


 


இன்றைக்கு தேதிக்கு தொழில் நுட்பங்கள் மனிதனிடைய கட்டுப்பாடுகளை விட அதிகமாக வளர்ந்துவிட்டது. உதாராணத்துக்கு ஃபைவ் ஜி தொழில்நுட்பத்தை எடுத்துக்கொள்ளுங்களேன். முறையாக ஹாக் பண்ணினால் ஃபோன்னில் 100 GB க்கு நம்முடைய போட்டோக்களும் வீடியோக்களும் இருந்தாலும் அப்படியே கொள்ளையடித்து நகலெடுத்து விடலாம். இந்த வகை தொழில் நுட்பங்கள் மக்களை சோதனை எலியாகவும் உலகத்தை சுடுகாடாகவும் மாற்றிவிடுகிறது ! கண்காணிப்பு கேமராக்களை பார்த்தால் கோபமாகத்தான் வருகிறது ஆனால் கடையில் பொருட்கள் திருட்டு போகாமல் இருக்க கண்காணிப்பு காமிராக்கள் மிகவுமே அவசியமான விஷயமாக இருக்கிறது அல்லவா ! இந்த காலத்தில் ஸ்மார்ட்னஸ் அதிகமாவதால் குற்றங்களுமே ஸ்மார்ட்டாக மாறிக்கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட வாழ்க்கையில் வெற்றியை அடைவது பாஸிப்லிட்டியில் இல்லை. ப்ரோபபிலிட்டியில் மட்டும்தான் உள்ளது. நமக்கு தேவையான சப்போர்ட் என்று ஆயிரம் பேர் நம்மோடு இருந்தாலும் வெற்றி என்னவோ நம்முடைய வாழ்க்கையில் கொண்டுவந்துவிட முடியாத ஒரு கான்ஸேப்ட்டாகவே மாறிவிட்டது. ஸ்ட்ராங்க்கான ப்ரெய்ன்ஸ் மற்றும் சப்போர்டிங் பீப்பிள் இருந்தால் யாராலுமே எதுவுமே சாதிக்க முடியும், பொருட்களுமே நமக்கு தேவை இருந்தாலும் இந்த பொருட்களை வைத்து இன்னுமே அதிகமான பொருட்களை வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த உலகத்தின் சிறந்த பழிவாங்கும் செயல் என்னவென்றால் பழிவாங்கும் செயல்தான். நம்ம சாதனைகளுக்காக அதிகமாக வேலைபார்த்துக்கொண்டு இருக்கும்போது மனதை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது மிகவுமே கடினமான விஷயம். நம்ம வாழ்க்கையில் இந்த ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டால் வாழ்க்கையின் நிறைய இடங்களை நம்மால் கடந்து செல்ல முடியும். இப்படி ஒரு தொழில் நுட்பம் வசதி வாய்ப்புகள் நிறைந்த நாட்களிலும் நிம்மதிக்கும் , அமைதிக்கும் , மனித தன்மைக்கும் , மன நிறைவுக்குமே என்று ஒரு புது டெக்னாலஜி உதயமாகவில்லை அல்லவா ? நம்முடைய மனதை குளிர்ச்சியாக வைத்துக்கொண்டால் நம்முடைய வாழ்க்கையில் ஒரு பேப்பர் பேனா வாங்கி சாதனை பட்டியல் எழுதும் அளவுக்கு நம்முடைய வாழ்க்கையினை முன்னேற்றம் நிறைந்த பாதையில் கொண்டு செல்லலாம். சோதனைகள் நம்முடைய வாழ்க்கையில் நிறையவே இருக்கிறது ஆனால் ஒவ்வொரு சோதனையிலும் ஏதாவது புது புது விஷயங்களை கண்டுபிடித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். முதல் முதலாக ஒரு சைக்கிள் கண்டறியப்படும்போது அந்த சைக்கிள் இரண்டு சக்காரங்களுடன் ஓட்ட முடிந்ததாக வரும்போது சோதனை பண்ணி பார்ப்பது எவ்வளவு கடினமானதாக இருந்து இருக்கும் பாருங்கள்.  இருந்தாலும் இரு சக்கர சைக்கிள்களுக்கு முந்தைய தொழில்நுட்பமே சிறந்தது என்று இருக்க முடியுமா என்ன ? ஒரு ஒரு முறையுமே காலம் மாற மாற நம்முடைய தொழில்நுட்பத்திலுமே மாற்றங்கள் வந்துகொண்டு இருக்கிறது, இவைகள் நல்ல மாற்றங்களா ? இல்லையென்றால் மோசமான மாற்றங்களா என்று கடவுள்தான் சொல்ல வேண்டும் !!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...