Friday, January 26, 2024

TAMIL TALKS EP. 34 - ப்ரோபபிலிட்டி ஆஃப் ரேண்டம் ஈவென்ட்ஸ் !

 




ப்ரோபபிலிட்டி ஆஃப் ரேண்டம் ஈவண்ட்ஸ் என்று நம்முடைய வாழ்க்கையில் எப்போது வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமென்றாலுமே நடக்கலாம். இந்த ரேண்டம் ஈவண்ட்ஸ் வகையில் என்ன பண்ணினாலும் நம்முடைய எல்லா முயற்சிகளுமே கிளைமாக்ஸ்ஸில் பூச்சியமாக மாறிப்போகும் அபாயம் இருக்கிறது. இது போல ஸ்வாரஸ்யமான சவால்கள் இருந்தால்தான் அது வாழ்க்கை. இவ்வளவு வலைப்பூ பதிவுகளை எழுதுகிறேன். இவைகள் பின்னாட்களில் பயன்படலாம் பயன்படாமலும் போகலாம் , யாருக்குத்தான் தெரியும் அல்லது யாரால் நம்முடைய எதிர்காலம் இதுதான் என்று சொல்ல முடியும் ? இது போல ரேண்டம் ஈவண்ட்ஸ்ஸை சமாளிக்க ஒரே ஒரு வழி நம்முடைய மூளையை மிகவும் சிறப்பாக பயன்படுத்தி வரும் சம்பவங்களை சாதகமாக பயன்படுத்திக்கொள்வதுதான். கடந்த காலம் கடந்த காலம்தான் விட்டுவிடுங்கள். தனிப்பட்ட ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அல்லது எவ்வளவு சாமர்த்தியமாக அந்த தனிப்பட்ட மனிதன் அந்த கஷ்டங்களை சமாளித்துவிட்டாலும் பின்னாட்களில் உலகம் எப்போதுமே அந்த மனிதனின் வெளிப்புற இமேஜ்ஜை மட்டும்தான் போராடுகிறது. நீங்கள் உங்கள் பிரச்சனைகளை சரிசெய்ய உங்கள் மொத்த உடல் வலிமையையும் களத்தில் இறக்க வேண்டிய அவசியம் இல்லை ஆனால் உங்களுடைய மொத்த திறமைகளையும் கொண்டுவந்து களத்தில் இறக்கிதான் ஆகவேண்டும். ஒரு ஆன்ட்ராய்ட் ஃபோன்னில் இருப்பது போல நம்முடைய வாழ்க்கைக்கும் எப்போதுமே புதிய செட்டிங்ஸ் தேவை. உங்களுடைய வாழ்க்கையின் அத்தனை பிரச்சனைகளையும் சரிசெய்ய உங்களுக்கு வெறும் ஒரு வாரம் ஒரே ஒரு  வாரம் போதுமானது. இருந்தாலும் உங்கள் பிரச்சனைகளை நீங்கள் அப்படியே விட்டுவிட காரணம் உங்களுடைய அறிவை பயன்படுத்தாமல் இருப்பதுதான் என்பதே என்னுடைய கருத்து. உங்களுடைய அறிவை பயன்படுத்துங்கள். உங்களுடைய வாழ்க்கையின் தகவல்களை நன்றாக ஆராய்ச்சி செய்து அடுத்த கட்ட அப்கிரேடை உங்களுக்கு நீங்கள் கொடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து உங்களுடைய அப்கிரேடட் வெர்ஷன்னாக இருக்கும்போதுதான் உங்களால் உங்கள் வாழ்க்கையின் பிரச்சனைகளை சமாளிக்க முடியும் இல்லை என்றால் கண்டிப்பாக மிகவும் சிரமம்தான். ஒரு நாள் மாற்றத்தை கொண்டுவர முடியாது ஆனால் ஒரு வாரத்தில் மாற்றத்தை கண்டிப்பாக கொண்டுவந்துவிடலாம். எப்போதுமே சாவோடு சண்டை போட்டு வாழ்ந்துகொண்டு இருக்கும் வாழ்க்கையில் நாம் எப்போது டிக்கெட் வாங்குவோம் என்று யாருக்குமே தெரியாது ஆனால் நாம் நம்முடைய மோஸ்ட் ஹை லெவல் சக்திகளை பயன்படுத்திதான் வாழ்க்கையை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம். நமக்கு நாம்தான் சப்போர்ட் என்பதை எப்போதுமே மறக்க வேண்டாம். நம்ம வாழ்க்கையில் ஒரு அளவுக்கு முன்னேறி விட்டோம் என்றால் பின்வாங்க வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு வாழ்க்கை நம்மை அதுவாகவே நதியின் ஓட்டம் போல முன்னால் கொண்டுசென்றுக்கொண்டே இருக்கும். இந்த வகையில் இருக்கும் முன்னேற்றத்துக்காக பொறுமையாக ஆகவேண்டிய வேலைகளை பாருங்கள். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...