நமது கதாநாயகர் நானும் பெரிய படைப்பாளன் என்று நம்பிக்கொண்டு பல வருடங்களாக சினிமாவில் வேலை செய்கிறார். இவரை போல நீங்கள் வேலை செய்தால் உங்கள் பல வருட உழைப்புக்கு ஏதோ நல்ல விஷயம் உங்களுக்கு கிடைக்கும் ஆனால் உங்களால் எதையுமே படைக்க முடியாது. அப்படியே படைத்தாலும் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் முடியாது . அப்படியே நீங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலும் மக்கள் பெரிய ஆதரவு எல்லாம் கொடுக்க மாட்டார்கள். இங்கே சினிமாவை நம்பி அங்கே வேலை கிடைக்கும் என்று சென்று மொக்கை வாங்கியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இங்கே சினிமா என்றால் உலகம். கலை துறையின் மாயாஜாலம் என்று பல உன்னதமான கருத்துகளை சொல்லி சினிமா என்பது ஒரு சொர்க்கம் என்று காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அடிப்படையில் சினிமா ஒரு நரகம். உங்களிடம் இருக்கும் பணத்தை, செல்வாக்கை, கௌரவத்தை , நேரத்தை , வேலையை என்று எல்லாமே எடுத்துகொண்டு பதிலுக்கு உங்களுக்கு ஒரு கதையை மட்டும்தான் சினிமா கொடுக்கிறது. நாடகக்கலையில் அடுத்த வேர்ஷன் என்று சினிமாவை சொல்லலாம். இந்த வேர்ஷன் யாராலும் அழிக்க முடியாத ஒரு 2.0 என்றால் அதுவும் மிகையாகாது. நீங்கள் சினிமாவில் ஷங்கர் போல பெரிய இயக்குநராக இருக்கலாம், ரகுமான் போல சிறந்த இசைக்கலைஞர் என்று இருக்கலாம் அல்லது தளபதி போல பெரிய நடிகராக இருக்கலாம். இது மூன்றுமே இல்லாமல் பணம் இருக்கிறது படம் எடுக்கிறேன் என்று இந்த தொழிலை நம்பி முதலீடு போடுபவராக இருக்கலாம் இங்கே சினிமாவில் நடந்துகொண்டு இருப்பது எல்லாமே அரசியல் சூதட்டம்தான். நீங்கள் நல்லவராக இருந்தால் உங்கள் குழுவில் இருக்கும் எல்லோரும் நல்லவராக இருந்தால் மட்டுமே போதாது தயாரிப்பு பண்ணும் கெட்டவர்களால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் எப்போதுமே பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். சினிமா எடுக்கிறேன் என்பதை விட்டுவிட்டு விசேஷங்களுக்கு ஃபோட்டோ மற்றும் வீடியோ கவரேஜ் பண்ணும் புரோபஷன் கூட நீங்கள் தேர்ந்து எடுக்கலாம். சினிமாவில் உங்களால் பணம் சம்பாதிக்க முடியவே முடியாது. உங்கள் வாடகை வீடு வாடகை வீடாக மட்டுமே இருக்கும் , வாங்கிய கடன்களுக்கு வட்டி அதிகமாகிக்கொண்டு இருக்கும். உங்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியாது. சினிமா எப்போதுமே உங்களுக்கு சிக்கென் பிரியாணி கொடுக்கிறேன் என்று புரோமிஸ் பண்ணி உங்களுடைய சக்திகளை மொத்தமாக பயன்படுத்திக்கொண்டு கடைசியில் உப்புமாதான் உங்களுக்கு கொடுக்கும். நீங்கள் நியாயம் கேட்டால் ஒரு ஓரத்தில் சினிமாவால் உங்களை போலவே ஏமாற்றப்பட்டு பணத்தை பொருளை என்று எல்லாமே இழந்து பழைய சோறு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் ஒருவரை காட்டி இவரை போல உங்களுக்கு பழைய சாப்பாடா கொடுத்தோம் ? உப்புமா தானே கொடுத்தோம் சந்தோஷமாக சாப்பிடுங்கள் என்று ஆறுதல் சொல்வது போல உங்களின் வாழ்க்கையை பயன்படுத்திக்கொள்ளும். குறிப்பாக பெண்களுக்கு சினிமா மிகவும் ஆபத்தான தொழில். பெண்களுக்கு பாதுகாப்புக்கு உத்திரவாதம் கிடைப்பதே பெரிய விஷயம். இளமையில் சினிமா மேல் ஆசைப்பட்டு கனவில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் சினிமாவை நம்பி முட்டாள் போல பணம் செலவு பண்ணாமல் தரமான கேமரா மற்றும் சாதனங்களை வாங்கி யூடியூப் சேனல் போன்று ஆரம்பித்து கிரியேட்டிவ் மூளைக்கு வேலை கொடுத்து உங்களுடைய வாழ்க்கையை நீங்களே தொடங்குங்கள். திரைப்பட துறை பெரிய திமிங்கிலங்கள் ஆட்சி பண்ணும் ஒரு சூதாட்ட கிளப் போன்றது. நீங்கள் அப்படியே கஷ்டப்பட்டு முன்னேறி ஒரு பெரிய பொசிஷன் வந்தாலும் உயரத்தில் இருந்து பாதாளத்திற்கு தள்ளிவிட்டு உங்களுடைய உடல் நிலை மோசமாக இருப்பதை ரசிக்க காத்திருப்பார்கள். உங்களிடம் உதவி என்று பணம் கேட்பவர்களின் வங்கிக்கணக்கில் பல லடசங்கள் பணம் இருக்கும் ஆனால் செலவுக்கு காசு இல்லை என்று 1000 ரூபாய் வாங்குவார்கள். கடைசிவரைக்கும் திருப்பி கொடுக்கவே மாட்டார்கள். இங்கே இத்தனை விஷயங்கள் நடந்துகொண்டு இருக்கும். சினிமாவுக்கு கடைநிலை ஊழியர் என்று இருப்பதற்கு பதிலாக ஒரு ஃபேக்டரியில் தொழிலாளர் பொறுப்பில் இருந்து வேலை செய்யலாம். நான் சினிமாவை பற்றி குறை என்று இவைகளை சொல்லவில்லை , சினிமாவில் பண்ணப்படும் பாவங்கள் மிக மிக அதிகம், அதனால்தான் படத்தை ஆரம்பிக்கும்போது முன்கூட்டியே பூஜை போட்டு ஆரம்பிக்கிறார்கள் போல ! இந்த காலத்து தலைமுறை இளைஞர்கள் சினிமா ஒரு கயமை நிறைந்த வஞ்சகர் உலகமாக மோசமான நிலையில் இருப்பதை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு இருக்கின்றனர். அதனால்தான் போன 10 ஆண்டுகளில் இருந்த இளைஞர்களை போல சினிமா போன்று ஒரு மோசமான துறையை தேர்ந்தெடுக்கும் தவறு செய்யாமல் உண்மையில் மற்ற துறைகளில் மட்டும்தான் நேர்மையான வெற்றி மற்றும் கிடைக்க வேண்டிய மதிப்பு அவர்களுக்கு கிடைக்கிறது என்பதை தெளிவாக கற்றுக்கொண்டு சினிமா தவிர்த்து நிறைய துறைகளில் சாதிக்க கிளம்புகிறார்கள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
PLANET NEPTUNE - நெப்ட்யூன் கிரகத்தை பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் !
1. Diameter: Approximately 49,244 km (30,598 miles) 2. Mass: About 1.02 × 10^26 kg (17 Earths) 3. Surface Gravity: 11.15 m/s² (1.14 g) 4. Or...
-
இந்த படம் நேரடியான எக்ஸ் மென் படங்களின் வரிசைக்கு ஒரு முடிவாக இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணி எடுத்ததாலோ என்னவோ கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மென்...
-
இது எல்லாமே உங்களுக்கு சொல்லும்போது அப்படியே உற்சாகமாக இருக்கும் இந்த புலிகேசி படத்தில் வருவது போல என்னமோ ஒரு நம்பிக்கையில் வல்லவராயன் மீது...
No comments:
Post a Comment