மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை இராப்பகலா என் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா ?
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராஜன் உன் வரவை இராப்பகலா என் மனசு தேடுதையா
பூங்காத்து வீசுது அனல பூசுது
பொன் மானே பக்கத்திலே கொஞ்சம் வாம்மா
தாங்காத ஆசையில் தவிக்கும் வேளையில்
தாலாட்டு பாடிக் கொஞ்சம் கொஞ்சலாமா
சேலை கட்டும் நந்தவனம் நீயா செம்பருத்திப் பூவுக்கு நீ
தாயா
கண்ணுக்குள்ளே காதலேனும் தீயா சின்ன இடை தேய்வதென்ன
நோயா
கட்டி அணைச்சா முத்தம் பதிச்சா நோய் முழுக்க தீர்ந்து
விடும் வாம்மா
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை இராப்பகலா என் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா ?
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராஜன் உன் வரவை இராப்பகலா என் மனசு தேடுதையா
கல்யாண மாப்பிள்ளே என்னை நீ பார்க்கல கண் மூடி
நாணத்திலே நிக்கலாமா
ஊரெங்கும் தோரணம் நடக்கும் ஊர்வலம் உன்னோட கன்னத்திலே
வைக்கலாமா
அந்தியிலே சந்தனத்த பூச , ஆசைகளை
கண்களிலே பேச
சேலையிலே நீ விசிறி வீச காலையிலே பார்த்த கண்ணு கூச
என்ன சுகமோ எப்ப வருமோ என்னென்னவோ பண்ணுதையா ஆசை
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை இராப்பகலா என் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா மனசோடு தேனை வார்க்குதா ?
மலையோரம் மாங்குருவி மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராஜன் உன் வரவை இராப்பகலா என் மனசு தேடுதையா
No comments:
Post a Comment