வேலையை செய்ய விருப்பம் இல்லாமல் வாழ்க்கையில் நிறைய சலிப்பும் சோர்வும் இருக்கும்போதும் வாழ்க்கையே மிகவுமே மன கசப்பாக இருக்கும்போதும் எந்த ஒரு நொடியையும் அனுபவிக்க விருப்பமே இருக்காது. பொதுவான குழப்பங்களில் பெரிய குழப்பம் நான் எதுக்காக இந்த விஷயங்களை பிராமிஸ் பண்ணினேன் ? எதுக்காக இப்போது நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறேன் ? என்பதுதான் இது எல்லா நாளுமே நடக்கும் ஒரு விஷயம்தான். நாம் என்னமோ ஒரு குருட்டு தைரியத்தில் நம்பிக்கையாக எதிர்காலத்தில் இது நடக்கும், நடத்தி காட்டுவேன் என்ற வார்த்தைகளை கொடுத்துவிடுவோம் ஆனால் நம்முடைய சக்திகளை மொத்தமுமே பயன்படுத்தினாலும் கொடுத்த வார்த்தையை நம்மால் நிறைவேற்ற முடியாது. இப்படி கொடுத்த வார்த்தைகளை நிறைவேற்ற முடியாமல் போவதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. இந்த வகையான காரணங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம். முதல் வகை நம்முடைய மனதின் காரணங்கள். நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை அடைய வேண்டும் என்றால் எப்போதுமே நம்மை நம்ப வேண்டும். ஆனால் நம்பினால் மட்டுமே போதாது வெற்றியை அடைய செய்யும் விஷயங்களுக்காக தேவைப்படும் பலமும் சக்தியும் நமக்குள்ளே இருக்க வேண்டும். இரண்டாம் வகை வெளிப்புறத்தில் இருந்து வரும் தடுப்புகள் , நாம் ஒரு விஷயத்தை செய்து முன்னேற கூடாது என்று தடுப்பு வெளியில் இருந்து வந்தால் நாம் என்ன செய்தாலும் அவைகளை தடுக்கும் மனிதர்கள் வெளியே இருந்தால் நம்மால் அப்போதுமே எதுவுமே பண்ண முடியாது. நீங்கள் ஒரு சிறப்பான திட்டத்தை கொடுக்கின்றீர்கள். உங்களுடைய மேலதிகாரி உங்களை முட்டாளாக கருதி உங்கள் திட்டங்களை குப்பைகளுக்கு அனுப்புகின்றார். இப்போது உங்கள் மீது தவறு என்றா சொல்ல முடியும் ? கண்டிப்பாக மேல் அதிகாரி மேலேதான் தவறு என்று தெளிவாக உங்களுக்கு புரிகிறது அல்லவா ? ஆனால் வேலை யாருக்கு கேட்டுப்போகிறது ? ஆட்சியில் ஆளுமையில் முன்னேற்றத்தை விரும்பாத சுய நலமும் மற்றவர்களை இளக்காரமாக ஏளனமாக பாருக்கும் குணமும் இருப்பவர் இருக்கின்றார் என்றால் அவர் பெரிய பெரிய முன்னேற்றங்களை இழக்கிறார். இணைந்து செயல்படாமல் எதிரிகளை சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றார். இவ்வாறுதான் நீங்கள் கொடுத்த வார்த்தைகளை நீங்களே நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்ற சம்பவம் நடக்கிறது, 1. உங்களுக்கு சக்தி மிகவும் குறைவாக இருக்கிறது 2. உங்களின் முயற்சிகள் வெளிமனிதர்களால் தடுக்கப்படுகிறது. இந்த மாதிரியான விஷயங்களால்தான் நான் எப்போதுமே ஒருவருக்கு இந்த விஷயத்தை செய்வோம் என்று பரோமிஸ் பண்ணி கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க சொல்கிறேன். காலம் எப்போதுமே நம்முடைய சப்போர்ட்டில் இருக்காது. நடக்கக்கூடிய சம்பவங்கள் நம்முடைய கட்டுப்பட்டுக்குள்ளேயும் இருக்காது. நான் கொடுத்த வார்த்தைகளை காப்பாற்ற முயற்சி செய்தால் சுமக்க நினைக்கும் பாரத்தின் எடை தெரிந்துகொள்ளாமல் தூக்கிக்கொண்டு சென்றுவிடுவேன் என்ற கவனமற்ற வாக்குறுதியை கொடுப்பதாக மட்டும்தான் என்னுடைய வாழ்க்கை எனக்கு இருக்கின்றது. அதனால்தான் ஒரு விஷயத்தில் இன்னொருவருக்கு வார்த்தை கொடுப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பதை எப்போதுமே தெளிவாக நான் புரிந்துகொண்டு வேலை செய்துகொண்டு இருக்கின்றேன். இந்த ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மட்டும் நிறைய வாழ்க்கை அனுபவங்களால் நான் பட்ட கஷ்டத்தினால் மட்டும்தான் கற்றுக்கொண்டேன். இது நிச்சயமாக என்னுடைய பட்டறிவுதான்.
No comments:
Post a Comment