ஒரு புத்தகத்தை ஒருவருடைய பாய்ண்ட் ஆஃப் வியூவில் இருந்து மட்டுமே எழுதவேண்டும் என்று நினைப்பது என்னை கேட்டால் ரொம்பவுமே சொதப்பலான விஷயம் என்றுதான் சொல்லுவேன். அப்படி எழுதினால் அந்த புத்தகம் எந்த அனுபவமும் இல்லாமல் எழுதிய புத்தகம் என்பதால் நிறைய மிஸ்டேக்குகள் அந்த புத்தகத்தில் இருக்கும். லாஜிக் மிக மிக அதிகமாகவே மிஸ்ஸிங் ஆகும். என்னமோ ஒரு விஷயம் குறைகிறது என்ற குறை புத்தகத்தில் இருக்கத்தான் செய்யும். நீங்கள் எழுத்து துறையை தேர்ந்தெடுத்தால் வருடக்கணக்கில் உங்களுக்கு நேரம் தேவைப்படலாம் !! இங்கே புத்தகம் எழுதிவிட்டால் உங்களுக்குதான் அந்த கதை சொந்தமானது என்று காப்புரிமை வாங்க வேண்டும் , இந்த ரேஜிஸ்ட்டர் பிராசஸ்க்கு 5000/- தேவைப்படலாம் , பப்ளிஷிங் நிறுவனம் உங்களுக்கு சப்போர்ட் பண்ணினால் (ஆறில் இருந்து அறுபது வரை படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை போல ) உங்களது புத்தகம் ஆஃப்லைன்னில் விற்கப்படும் ஆனால் பதிப்பக செலவுக்காக நீங்களும் குறைந்தது 50000/- ஆவது செலவு பண்ண வேண்டியது இருக்கும். இது எல்லாமே உங்களிடம் பணம் நிறைய இருக்கும் பட்சத்தில் சாத்தியமான விஷயமே ! உங்களிடம் பணம் இல்லை என்றால் கண்டிப்பாக தினம் தினம் பாதுகாப்பற்ற பப்ளிஷிங் பண்ணிய காரணத்துக்காக நரக வேதனையை நீங்கள் அனுபவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. உங்களுடைய கதை கண்டிப்பாக நிறைய சேல்ஸ் ஆகும் அளவுக்கான ஸ்டாண்டர்ட்ஸ்ஸில் அளவுக்கு இருப்பது உங்களுக்கு நல்லது. இன்னொரு வகை செல்ஃப் பப்ளிஷ் பண்ணுவது , கிண்டில் மாதிரியான தளங்களில் பப்ளிஷ் பண்ணலாம் ஆனால் உங்கள் புத்தகம் அவ்வளவாக சேல்ஸ் ஆக வாய்ப்பு குறைவுதான். இங்கே எழுதுவது என்பதுதான் இப்போதைய கான்ஸெப்ட் , இந்த காலத்தில் இணையதளம் இருக்கிறது , புத்தகம் எழுதக்கூட AI ப்ரோக்ராம்கள் வந்துவிட்டன ! நானும் சினிமாவில் ஹீரோ ஆகப்போகிறேன் என்று சொல்லிவிட்டு அறைக்குள்ளே முடங்கி கிடந்தால் எதுவுமே நடக்காது !! உங்களுக்கு உங்களுடைய துறையில் சாதிக்கமுடிந்த நிறைய பேரை தெரிந்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் புத்தகம் என்று மட்டுமே இல்லை , எந்த ஒரு ஃபிக்ஷன்னல் வொர்க்காக இருந்தாலும் உங்களால் சாதிக்கும் அளவுக்கு வேலை செய்து சம்பாதிக்க முடியும். உங்களுடைய வொர்க்ல இருக்கக்கூடிய சக்திதான் உங்களுக்கு சம்பாதித்து கொடுக்கப்போகிறது என்பதை எப்போதுமே புத்தக எழுத்தாளராக நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களால் புத்தகம் எழுத முடியாவில்லை என்றால் கண்டிப்பாக வேறு ஒரு விஷயத்தை தேர்ந்தெடுத்து பணம் சம்பாதிக்க வேண்டும், உங்களுக்காக சாப்பாடு , தூக்கம் , உடைகள் , தண்ணீர் , மின்சாரம் , பொருட்கள் என்று நிறைய விஷயங்கள் உங்களுக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கிறது , நீங்கள் ஸ்டார் எழுத்தாளராக இருந்தாலும் எழுத்து உங்களுக்கு இவ்வளவு எல்லாம் சம்பாதித்து கொடுக்காது. கொஞ்சமாகத்தான் சம்பாதித்து கொடுக்கும் , 20000/- ஒரு வருஷத்துக்கு என்றால் அதுவே குறைவுதான் , உங்கள் போனுக்கு ரீசார்ஜ் போடும் அளவுக்கு உங்களுக்கு பணம் கிடைத்தால் போதுமானது என்றால் புத்தகம் உங்களுக்கான ஒரு துறையாக இருக்கலாம் , முழு நேரம் புத்தகம் பண்ணவேண்டும் என்றால் அடுத்த தலைமுறை வரை தாங்கும் அளவுக்கு பணமாக உங்களிடம் கொட்டி கிடந்தால் மட்டும்தான் முடியும் !!
No comments:
Post a Comment